மணிரத்னத்தின் முதல் படத்திற்கு இசையமைத்த காரணம்- நிகழ்ச்சியில் இளையராஜாவே சொன்ன பதில். (எந்த படம் தெரியுமா ? )

0
444
Ilayaraja
- Advertisement -

மணிரத்னத்தின் முதல் படத்திற்கு இசையமைத்ததற்கான காரணத்தை நிகழ்ச்சி ஒன்றில் இளையராஜா கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் இசையில் ஜாம்பவானாக திகழ்பவர் இளையராஜா. இவருடைய இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை என்று சொல்லலாம். ஏன்னா, அந்த அளவிற்கு தன்னுடைய இசையால் எல்லோரையும் கட்டிபோட்டவர். இப்படி ஒரு சூழ்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இளையராஜா அவர்கள் மோடியும், அம்பேத்காரையும் ஒப்பிட்டு பேசி இருந்தார்.

-விளம்பரம்-
இளையராஜா எத்தனை பாடலை திருடியுள்ளார் தெரியுமா.! அவரது குடும்பத்தாரே சொன்ன  விவரம்.! - Tamil Behind Talkies

மோடி குறித்து இளையராஜா கூறியது:

இளையராஜாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த ஒப்பீட்டுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றது. இருந்தாலும் இளையராஜா தன் இசை பணியை செய்து கொண்டு வருகிறார். தற்போது இளையராஜா இசையமைத்து இருக்கும் படம் அக்கா குருவி. சிந்து சமவெளி, உயிர், மிருகம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சாமி அவர்கள் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இளையராஜாவே மூன்று பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார்.

- Advertisement -

அக்கா குருவி படம் பற்றிய தகவல்:

மேலும், 1997-ஆம் ஆண்டு மஜித் மஜிதி இயக்கத்தில் வெளியான ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ படம் மிகப் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் 1998 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் அந்த ஆண்டிற்கான சிறந்த சர்வதேச திரைப்படத்தின் பிரிவிலும் இந்த படம் பரிந்துரைக்கப்பட்டது. இப்படி உலகம் முழுவதும் புகழ்பெற்ற இந்தப் படத்தை அக்கா குருவி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படம் மே 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் பங்குபெற்ற இளையராஜா கூறியிருப்பது,

அக்கா குருவி' படம் மாதிரி படங்கள் வரவேண்டும்.." இளையராஜா - Kalaipoonga

அக்கா குருவி படம் குறித்து இளையராஜா கூறியது:

சாதாரணமாக நாட்களில் நான் உலக சினிமாக்கள் பார்ப்பது வழக்கம்.நான் இசை அமைக்கும் சினிமாவை பார்ப்பதோடு சரி, மற்ற சினிமாக்களை பார்க்க அவ்வளவாக நேரம் கிடைப்பதில்லை. ஆனால், உலக சினிமாக்களை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் இருக்கும். அப்படி தான் ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ படம் பார்த்தபோது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒரு சின்ன ஷுவை வைத்துக் கொண்டு, சின்ன குழந்தைகளின் உலகத்தை ஒரு சின்ன பிரச்சனையை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்? என்பதை தத்ரூபமாக அற்புதமான சினிமாவாக தந்துள்ளது ஆச்சரியமாக இருந்தது.

-விளம்பரம்-

சாமி குறித்து இளையராஜா :

நம் தமிழ்நாட்டில் ஏன் இப்படி படங்கள் எடுப்பதில்லை? ஏன் வருவதில்லை? என்ற வருத்தமும் இருந்தது. ஒரு கலைஞனுக்கு உயர்வான சிந்தனை தோன்றினால் தான் அவனை தாக்கினால் தான் உயர்வான ஒன்றை உருவாக்க முடியும். அது நம் இயக்குனர்களிடம் இல்லை. ஆனால், இயக்குனர் சாமி அதே படத்தை நம்மூரில் எடுத்தால் எப்படி இருக்கும் என்றும், நம்ம ஊருக்கு தகுந்தவாறு அந்த கதையை மாற்றி ஒரிஜினல் படத்தை விட கொஞ்சம் சுவாரசியமாக அருமையாக எழுதி இருக்கிறார்.

மணிரத்தினத்தின் படத்திற்கு இசை அமைக்க காரணம்:

பொதுவாகவே இந்த மாதிரி புது இயக்குனர்கள் வரவேண்டுமென விரும்பி அவர்களின் படங்களுக்கு இசை அமைப்பேன். அதுமட்டுமில்லாமல் நான் மனிரத்தனத்தின் முதல் படத்திற்கு இசையமைத்த காரணமும் அது தான் என்று கூறி இருந்தார். மணிரத்னம் முதன் முதலில் கன்னடத்தில் பல்லவி அனு பல்லவி என்ற படத்தை இயக்கி இருந்தார். இதில் அணில் கபூர் நாயகனாக நடித்து இருந்தார். அதன் பின்னர் தளபதி படம் வரை மணிரத்னம் படங்களுக்கு இளையராஜா தான் இசையமைத்தார். ரோஜா படத்திற்கு பின்னர் மணிரத்னம் படங்களுக்கு ஏ ஆர் தான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement