தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 70 காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசை பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இவருடைய இசையை ரசிக்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சமீபத்தில் லண்டன் மாநகரில் புதிய சிம்பொனி இசை கோர்வையை இளையராஜா அவர்கள் அரங்கேற்றம் செய்து இருந்தார். சிம்பொனி என்பது மேற்கத்திய இசை ஆகும். இதை வெறும் 34 நாட்களில் இளையராஜா உருவாக்கி இருந்தார்.

இது இளையராஜாவின் முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஆகும். இதன் மூலம் தமிழர்களின் பெருமை உலகெங்கும் பரவி இருக்கிறது. இதற்காக முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே இளையராஜாவை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இதை அடுத்து லண்டனில் சிறப்பாக சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டு இளையராஜா சென்னை திரும்பி இருந்தார்.
இளையராஜா சிம்பொனி:
இதை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இளையராஜாவின் இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் அரசின் சார்பாக விழா ஏற்பாடு செய்து இருக்கிறார். இதை அடுத்து பிரபலங்கள் பலருமே இளையராஜாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையில் நிகழ்ச்சியை முடித்து இந்தியா திரும்பிய இளையராஜா அவர்கள் செய்தியாளர் சந்திப்பில், என்னுடைய சிம்பொனி நிகழ்ச்சியை யாரும் டவுன்லோட் செய்து பார்க்க வேண்டாம் என்று கூறி இருந்தார். இப்படி இவர் கூறியிருந்தது சோசியல் மீடியாவில் சலசலப்பு ஏற்படுத்தி இருந்தது.

இளையராஜா பேட்டி:
இந்த நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் இளையராஜா, நான் வாசித்த சிம்பொனியை டவுன்லோட் பண்ணாமல் நேரடியாக கேளுங்கள் என்று தான் சொன்னேன். இப்போது நீங்கள் இங்கு நான் பேசுவதை நேரடியாக கேட்பதற்கும், ரெக்கார்ட் பண்ணி கேட்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஒரே நேரத்தில் 80 மியூசிக் இன்ஸ்ட்ருமென்ட் வாசிக்கும் பொழுது கொடுக்கிற அந்த அனுபவம் உங்களை உயர்ந்த மன நிலைக்கு கொண்டு செல்லும். ஒரே சமயத்தில் வாசிக்கிற அனைத்து பேருடைய உடல், உயிர், சிந்தனை என்று ஒன்றாக சேர்த்து ஒரு இசையை கொண்டு வரும்போது வெளியுற சத்தம் சிலிர் படையை செய்யும்.
சர்ச்சைகளுக்கு விளக்கம்:
அதனால்தான் நேரடியாக மக்கள் கேட்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால், இவர் வந்தாலே இப்படி தான்யா பேசுறார் என்று கிண்டல், கேலி செய்கிறார்கள். அதை உணர்ந்து பார்த்ததற்கு பிறகு தான் இந்த பேச்சை பேசணும். இது எல்லாரும் கேட்கணும் என்ற உணர்வில் தான் நான் சொன்னேன். இதுவரை மக்கள் இந்த மாதிரி இசை எல்லாம் கேட்காமல் இருந்திருக்கலாம். இதுவரைக்கும் இல்லாத உணர்வை உணரும் போது தான் அடடா என்று நம்மை அறியாமல் பாராட்டுவோம். அதுதான் ரசனை, அதுதான் பக்தி. திருவள்ளுவர் குறலை எழுதும் போது தெரிந்ததை மட்டும் தான் எழுதினார். அதற்கு பிறகு தான் அது எல்லாருக்கும் பொதுவானதாக மாறி திருக்குறள் என்று புகழ் பெற்றது.
https://www.youtube.com/watch?v=t4Y0nCOcPsQ
இளையராஜா சொன்ன வார்த்தை:
அது மாதிரி தான் நானும் தெரியாததை எல்லாம் தேடித் தேடி போகும்போது உயர்ந்ததை கொடுக்கணும் என்று ஒரு எண்ணம் வரும். இது எல்லாம் காசு வரும்னு பண்ணவில்லை. மக்களுக்கு சொல்லணும் என்று தான் பண்ணேன். இசையை கேட்கும்போது அது ஒரு அனுபவம் என்று தோன்றினாலே போதுமானது. அதை எப்படி எடுத்துக்கணும் யோசிக்கிறதே வறட்டு தனமான இன்டெலிஜென்ஸ். ஒரு பாடல் ஒன்னு தான் இருக்கணும். அதே மாதிரி இன்னொன்னு இருக்கக்கூடாது. என்னிடம் பாட்டு கேட்டு வரும்போது சிலர், இந்த பாட்டு மாதிரி வேணும்னு கேட்பார்கள். அப்படி கேட்கிறவர்களுக்கு பாட்டோட மதிப்பு குறைத்து வருவார்கள். அந்த பாட்டுக்கு மேல் நான் இசையமைக்க போவதில்லை. அதை ஏன் மக்கள் புரிந்து கொள்ளவில்லை என்று எனக்கு தெரியவில்லை. ஏதாவது ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் தான் அதில் முன்னேற முடியும் என்று நம்ப ஆரம்பித்தேன். அது தான் எனக்கு பாடமாகவும் அமைந்தது என்று கூறியிருந்தார்.






