அம்மா பாசம், டெடிகேஷன், மறுத்த படங்கள் , நிறைவேறாத ஆபரணங்களுக்கு No – 80வது பிறந்தநாளில் இளையராஜா பற்றிய சுவாரசிய தகவல்.

0
3012
Ilayaraja
- Advertisement -

தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. அன்னக்கிளி மூலம் 1976-ல் தமிழ் சினிமா வாழ்க்கையை துவங்கி இவரின் இசையை விரும்பாத ரசிகர்கள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.மேலும், 80ஸ் காலகட்டத்தில் ஹீரோ ஹீரோயினை புக் செய்யும் முன்பாக இளையராஜாவை தான் முதலில் இயக்குனர்கள் புக் செய்வார்கள். அதற்கு காரணம் இவர் இசையமைத்தால் அந்த படம் நிச்சயம் ஹிட் என்று நம்பினார்கள். இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் பல உள்ளது.அப்படிப்பட்ட இளையராஜாவின் வாழக்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை அவரின் பிறந்த நாளான இன்று தெரிந்து கொள்வோம்

-விளம்பரம்-

அம்மா பாசம்

இளையராஜா தன் அம்மாவின் மேல் பாசம் வைத்துள்ளார் என்பதை விட தீராத பக்தி வைத்திருந்தார் என்று சொல்வதை சரியாக இருக்கும். ஆம் இளையராஜா இப்போதும் கூட தன்னுடைய அம்மாவின் நினைவு வரும் போதெல்லாம் முல்லை ஆற்றின் கரையில் உள்ள லோயர் கேம்பில் உள்ள தன் அம்மாவின் சமாதிக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

- Advertisement -

பல பெருமைக்கு சொந்தகாரர் இளையராஜா

தற்போதைய நாட்களில் புதிய புதிய தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவில் உபயோகப்படுத்தி இருந்தாலும், அதே போல் பல வகையான புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்திய பெருமை இளையராஜாவுக்கு உண்டு ஆம் சாதாரண ஆர்மோனியத்தை வைத்துக் கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தார். மேலும் இந்த ஆசியாவிலேயே முழு சிம்பொனியை இசையமைத்த பெருமை இளையராஜாவுக்கு மட்டுமே சொந்தமானது.

கம்ப்யூட்டரில் இசை

தமிழ் சினிமாவில் கம்ப்யூட்டரில் முதல் முதலில் இசையமைத்ததும் இளையராஜா தான் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் படத்தில் கம்ப்யூட்டரில் தான் இளையராஜா இசையமைத்தார். மேலும் ரஜினி ஸ்ரீதேவி நடிப்பில் உருவான ப்ரியா படம் முதன் முதலில் ஸ்டீரியோ தொழில்நுட்பத்தில் வெளியான முதல் படம், அது மட்டும் இல்லாமல் இந்தியாவின் முதல் ஸ்டீரியோ 3டி முறையில் படமாக்கப்பட்ட ” மை டியர் குட்டிசாத்தான” படத்தில் இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா தான்.

-விளம்பரம்-

கடவுள் பக்தி

என்னதான் பணம் இளையராஜாவை சுற்றி கொட்டி கிடந்தாலும் முதல் முறையாக மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்று வந்த இளையராஜா அதன் பின் நகைகள் ஆபரணங்கள் அணிவதை விட்டுவிட்டார். மேலும் அசைவ உணவுகளை உண்பதையும் நிறுத்திவிட்டு இப்போது வரையும் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்டு வருகிறார்.

கடமை தவறா இளையராஜா

இளையராஜா தினசரி காலை 7 மணிக்கு எல்லாம் ரெக்கார்டிங் தியேட்டர் வந்துவிடுவார் அப்படி வந்ததும் அன்றைய நாளில் என்ன படத்திற்கு இசையமைக்கிறாரோ அந்த படத்திற்கான இசை குறிப்புகளை ரெக்கார்டிங் தியேட்டர் வந்த 10 நிமிடத்திற்குள் கொடுத்து விடுவாராம். ஏன் வேறு ஏதும் புதிய ஸ்டூடியோ விற்கு அவர் மாறினாலும் கூட காலை 7 மணிக்கு பிரசாந்த் ஸ்டுடியோவிற்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

சின்ன திரையில் இளையராஜா

என்னதான் இளையராஜா சினிமாவில் கொடி பறந்தாலும் இசைக்கு எல்லையே இல்லை என்பது போல் சின்ன திரையிலும் இசையமைக்க தவறவில்லை. ஆம் ” பெண், நம்ம குடும்பம், தெக்கதிப் பொண்ணு ஆகிய சின்னத்திரை தொடர்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

இசையமைக்க மறுத்த படம்

இளையராஜா பல படங்களுக்கு இசையமைத்து இருந்தாலும் சில படங்களுக்கு இசையமைக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். ஆம் பார்த்திபனின் புதிய பாதை, பாக்யராஜின் ஒரு கை ஓசை, எஸ்.பி.பி நடித்த சிகரம் இந்த படங்கள் எல்லாம் இளையராஜா இசை அமைக்க மறுத்த படங்கள்.

போட்டகிராபி ஆர்வம்

இசைஞானி இளையராஜாவுக்கு இசையில் மட்டும் தான் ஆர்வம் அதிகம் என்று நினைத்தால் அது உங்கள் தவறு நம் இளையராஜாவுக்கு போட்டோகிராபி மீதும் பிரியம் அதிகம் உண்டு, அதனால் அவர் எங்கு வெளியே சென்றாலும் காரின் பின் சீட்டில் அமர்ந்தபடி தன் அருகிலேயே கேமராவையும் ஆர்மோணிய பெட்டியையும் வைத்திருப்பார்.

நிறைவேறா ஆசை

இவ்வளவு படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு ஒரு படம் இசையமைக்காமல் போனது குறித்து தீரா வருத்தம் உண்டு. ஆம் எம்.ஜி.ஆர் நடிப்பில் படமாக்க பட இருந்த “உன்னை கைவிடமாட்டேன்” என்ற படத்திற்கு இளையராஜா இசை அமைக்க ஒப்புக்கொண்டு அனைத்தும் கைகூடிய நிலையில் படம் பூஜை போட்டதோடு நின்றது.

இளையராஜா பாட காரணம்

படங்களில் இசை மட்டும் அமைத்துக் கொண்டிருந்த இளையராஜா அந்த இசைக்கு பாட ஆரம்பித்ததற்கு பின்பு ஒரு சம்பவம் இருக்கிறது. ஆம் இசையமைப்பாளர்களுக்கு என்று இருந்த யூனியனில் ஷிப்ட் முறை பயன்பாட்டிற்கு வந்தது காலை 7:00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும். அதன் பிறகு சாப்பிட 1 மணி நேரம் இடைவெளி விட்டு பின் மதியம் 2 மணியிலிருந்து இரவு 9 மணி வரை ஷிப்ட் நேரங்கள் பிரிக்கப்பட்டது. இப்படி இந்த ஷிப்ட் முறை பயன்பாட்டில் வந்ததால் தான் இன்று பலரும் இளையராஜாவின் இசையை மட்டும் இல்லாமல் அவர் பாடலையும் கேட்டு ரசிக்கிறீர்கள்.

தூய்மையான உள்ளம்

என்னதான் தற்போதைய சோசியல் மீடியாக்களில் இளையராஜாவின் பாட்டை கேட்கலாம் ஆனால் அவர் பேசுவதை கேட்க முடியாது என்று மீம்ஸ்கள், வீடியோக்கள் ட்ரெண்டிங்கில் இருந்தாலும். அவருடைய மென்மையான உள்ளம் பற்றி யாருக்கு தெரியும். ஆம் தனக்கு நெருக்கமானவர்கள் யாரேனும் இறந்து விட்டார்கள் என்றால் அவர்களுக்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றுவதை இளையராஜா நீண்ட நாட்களாக கடைபிடித்து வருகிறார். ஏன் எம்.எஸ் விஸ்வநாதன், எஸ்.பி.பி இவர்களுக்கு கூட இளையராஜா மோட்ச தீபம் ஏற்றி இருக்கிறார்.

Advertisement