‘இளைய நிலா பொழிகிறது’ பாடலுக்கு இசை அமைத்த கிட்டார்ஸ்ட் மரணம் – கலங்கியபடி இரங்கல் கூறிய இளையராஜா.

0
810
- Advertisement -

தமிழ் சினிமாவில் இசையின் சிகரமாக இருக்கும் இளையராஜா உலகம் முழுவதும் புகழ்பெற்றவர். அதே போல மறைந்த எஸ்.பி.பலாசுப்பிரமணியம் அவர்களின் பெருமையை சொல்ல தேவையில்லை. அப்படி இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய பயணங்கள் முடிவதில்லை படத்தில் வரும் “இளைய நிலா” பாடல் இன்றும் ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பாடலுக்கு வலிமை எஸ்.பி குரல் என்றால் அதற்கு மேலும் வலிமை சேர்த்தது இந்த பாடலில் வரும் கிடார் ம்யூசிக் தான். அந்த கிட்டார் இசைத்தவர் தான் கே.சந்திரசேகர். இவர் இளையராஜாவின் தளபதிகளில் ஒருவராக இருந்து வந்தவர்

-விளம்பரம்-

“இளைய நிலா” கிடார் ம்யூசிக் பிறந்த கதை :

இளைய நிலா பாடலை பற்றி அதில் கிட்டாரிஸ்டாக இருந்த கே.சந்திரசேகர் ஒரு பேட்டியில் இளைய நிலா பாடல் எப்படி அமைந்தது என்பதனை பற்றி பேசியிருந்தார். இந்த பாடல் முதலில் சலவை நிலா என்றுதான் இருந்தது. ஆனால் அதற்கு பிறகு கங்கை அமரன் தான் இளைய நிலா என்று மாற்றினார். இந்த பாடல் 2ல் இருந்து 9 மணி வரையில் ஜெமினி ஸ்டுடியோவில் பதிவு நடக்க வேண்டியது. இளையராஜாவே ஸ்வரம் போட்டு கொடுத்ததால் என்னுடை வேலை சுலபமாகிவிட்டது. ஆனால் கடைசியாக வந்த இசை அவர் போட்டு கொடுத்த ஸ்வரம் கிடையாது நானே தயார் செய்தது.

- Advertisement -

இந்த பாடலில் பல லட்சம் ரூபாய் மதிப்பு இருக்கும் பாடல் பாடுபவர்கள் உபயோகிக்கும் மைக்கை பயன்படுத்தினோம். முதலில் ஒரே டேக்கில் வாசித்து காட்டிய உடன் இளையராஜா இதுவே போதும் என்று சொல்லிவிட்டார். இதனை பார்த்த அங்கிருந்த அனைவரும் எனக்கு கைதட்டினார்கள். 6மணிக்கு தொடங்கிய இந்த பாதிப்பு 7மணிக்கு முடிந்தது விட்டது. ஒரே டேக்கில் ஓகே ஆனா பாடல் அது. ஒரு பாடல் எப்போது ஹிட் ஆகும் என்று யாருக்குமே தெரியாது.

கே.சந்திரசேகர் மறைவு :

அவர்களை பொறுத்தவரையில் 10வுடன் 11வது பாடல் அவ்வளவுதான். ஆனால் இந்த பாடல் பெரிய ஹிட் அடித்தது. எனக்கு பிடித்த இசையமைப்பாளர்களில் இளையராஜா மிகவும் விருப்பமான ஒருவர் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார். கே.சந்திரசேகர் பல ஆண்டுகளாக கிடாரிஸ்ட்டாக இருந்து வருகிறார். அதோடு இவரது சகோதரர் இளையராஜா குரூப்பில் பல ஆண்டுகளாக ட்ரம்மீஸ்ட்டாக இருந்தது வந்தவர்.

-விளம்பரம்-

பிரபலங்கள் இரங்கல் :

இந்நிலையில் அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு காலமான நிலையில். நேற்று மாலை “இளைய நிலா” கிடாரிஸ்ட் கே.சந்திரசேகர் காலமானார். அவருக்கு தற்போது 79வயது ஆகியிருந்தது. கே.சந்திரசேகர் “இளைய நிலா” தவிர்த்து பாடி வா தென்றலே, பாடும் வானம்பாடி போன்ற பல பாடல்களை இளையராஜாவுடன் இணைத்து உருவாக்கி இருக்கிறார்.இந்த நிலையில் தான் இவர் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சந்திரசேகரன் மரணம் குறித்து இளையராஜா தன்னுடைய வீடியோ ஒன்றை சமுக வலைதளத்தில் வெளியிட்டு, இரங்கல் தெரிவித்துள்ளார்.

இளையராஜா இரங்கல் :

அதில் “என்னுடன் பணியாற்றிய, எனக்கு மிகவும் பிரியமான, இசை கலைஞரான கே. சந்திரசேகரன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். அவர் என்னிடம் இருந்த புருஷோத்தமன் அவர்களின் சகோதரர் ஆவார். நாங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் மேடையில் இருந்து திரைக்கு வந்தவர்கள். அவர் என்னுடன் இணைந்து நிறைய பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அந்தப் பாடல்கள் தற்போது வரை மக்கள் மனதிலே நீங்காமல் உள்ளன. அவருடைய இறப்பில் மிகவும் வருத்தம் அடைகிறேன். அவருடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement