படமும் பாடலும் ஹிட் ஆனாலும் கே பாலசந்தர், இளையராஜா கூட்டணியில் விரிசல்-காரணம் இது தான்

0
215
- Advertisement -

கே பாலச்சந்தர்- இளையராஜா இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் மிக பிரபலமான இயக்குனராக இருந்தவர் கே பாலச்சந்தர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நாடக ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 100 படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் பணியாற்றி இருக்கிறார்.

-விளம்பரம்-

அதோடு இவர் தமிழ் சினிமாவில் நுழைந்த ஆரம்ப கட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜி வைத்து பெரிதாக படம் கொடுக்கவில்லை. சிவாஜியை வைத்து ஒரே ஒரு படத்தை மட்டும் தான் இயக்கி இருந்தார். சிவாஜி நடிப்பில் வெளியான எதிரொலி படம் பெரிய அளவிற்கு வரவேற்பை பெறவில்லை, நெகட்டிவான விமர்சனங்களை தான் பெற்றிருந்தது. அதற்குப் பிறகு தான் இவர் பல நடிகர்களை தமிழ் சினிமாவுக்கு உருவாக்கிக் கொடுத்தார். குறிப்பாக ரஜினி, கமல், விவேக், நாகேஷ் போன்ற பல நடிகர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் படுத்தி வைத்தது கே பாலச்சந்தர் தான்.

- Advertisement -

கே பாலசந்தர் குறித்த தகவல்:

அதிலும் இவருக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் நாகேஷ். மேலும், இவர் நாடகங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இசையமைத்த வி குமாருடன் தான் படங்களிலும் பணியாற்றி இருந்தார். அதற்குப் பிறகு எம் எஸ் விஸ்வநாதன் உடன் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருந்தார். 70 களின் இறுதியில் தான் இளையராஜா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அப்போது அவருடைய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதே போல் பாலச்சந்தர்- எம் எஸ் வி கூட்டணியும் சிறப்பாக இருந்தது.

பாலசந்தர்-இளையராஜா கூட்டணி:

பின் 1985 ஆம் ஆண்டு சிந்துபைரவி என்ற படத்தை கே பாலச்சந்தர் இயக்கியிருந்தார்.அந்த படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக இளையராஜாவை கேட்டிருந்தார். சிந்து பைரவி படத்தை தொடர்ந்து மனதில் உறுதி வேண்டும், புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி போன்ற பல படங்களுக்கு இளையராஜா தான் இசையமைத்து கொடுத்திருந்தார். பின் கடைசியாக கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாகி இருந்த புதுப்புது அர்த்தங்கள் படத்திற்கு இசையமைக்க இளையராஜாவிடம் கேட்டு இருந்தார். அப்போது அவர் 32 படங்களுக்கு இசையமைத்திருந்தார்.

-விளம்பரம்-

புது புது அர்த்தங்கள் படம்:

புது புது அர்த்தங்கள் தீபாவளி பண்டிகையின் போது வெளியாகும் என்பதால் பின்னணி இசை அமைக்க கே பாலச்சந்தர் கேட்டிருக்கிறார். உடனே இளையராஜா இப்போது நேரமில்லை, அதற்கு பிறகு செய்து தருகிறேன் என்று கூறியிருக்கிறார். இளையராஜாவும் சரி என்று அமைதியாக இருந்தார். ஒரு கட்டத்தில் நேரமில்லாததால் இளையராஜா கங்கை அமரனை வைத்து பண்ணலாமா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு பாலச்சந்தர் மறுத்திருக்கிறார். அதனை தொடர்ந்து பாலசந்தர், நீங்கள் ஏற்கனவே போட்ட பின்னணி இசை இருக்கிறது.

சண்டைக்கு காரணம்:

அதை இந்த படத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாமா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு இளையராஜா சரி என்று சொன்னார். அதற்கு பிறகுதான் புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இளையராஜா பின்னணி இசை சேர்க்கப்பட்டு படமும்,பாடல்களும் நல்ல ஹிட் கொடுத்தது. இதைப் பார்த்த இளையராஜா, நான் போடாத இசை. ஏதோ ஒரு நினைவில் நான் இசை அமைத்தது. என்னுடைய பெயரில் வந்திருக்கிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இனி பாலச்சந்தர் படங்களுக்கும், அவர் தயாரிக்கும் படங்களுக்கும் இசையமைக்க மாட்டேன் என்று இளையராஜா கூறியிருந்தார். அதற்குப் பின் இருவரின் கூட்டணியிலும் படங்கள் வெளியாகவில்லை.

Advertisement