மோடிக்கு இந்த ஆலோசனை தோன்றியதை எண்ணி வியந்து கொண்டிருக்கிறேன் – இளையராஜா

0
483
- Advertisement -

மோடியின் ஆலோசனை குறித்து இளையராஜா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசையின் ஜாம்பவனாக பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வருபவர் இளையராஜா. இவர் இசையின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து இருக்கிறார். அதோடு இவரின் இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை என்று சொல்லலாம். சமீபத்தில் இளையராஜாவுக்கு Mp சீட் கிடைத்து இருக்கிறது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ராஜ்யசபா நியமன எம்.பி. பதவி வழங்கப்படுவது வழக்கம்.

-விளம்பரம்-

அதனடிப்படையில் தற்போது இசைஞானி இளையராஜாவுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு இருந்தது. சமீபத்தில் கூட இளையராஜாவிற்கும் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு இருந்தது. இப்படி அடுத்தடுத்து இளையராஜாவிற்கு மத்திய அரசில் இருந்து கௌரவம் குவிந்து வரும் நிலையில் மோடியின் ஆலோசனை குறித்து இளையராஜா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நேற்று காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சி நடந்தது.

- Advertisement -

காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி தான் தொடங்கி வைத்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். அப்போது மேடையில் இளையராஜா கூறியிருந்தது, காசி நகருக்கும் தமிழுக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை அனைவரும் விளக்கி பேசி இருந்தார்கள்.

இளையராஜா சொன்னது:

பாரதியார் இங்கு இரண்டு வருடம் படித்திருக்கிறார். ‘காசி நகர் புலவர் இங்கே செய்யும் பேச்சுக்களில் காசியில் கேட்க ஒரு கருவி செய்வோம்’ என்று இந்தியாவிற்கு எந்த விதமான முன்னேற்றமும் இல்லாத நேரத்திலே அவர் அந்த பாடலை பாடியிருக்கிறார். கங்கை நதி புறத்து கோதுமை பண்டம், காவேரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம் என்றும் வங்கத்தின் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்தின் நாடுகளில் பயிர் செய்வோம் என்று நதிகள் இணைப்பு திட்டம் வருவதற்கு முன்பே தனது 22 வயதில் பாடி சென்றவர்.

-விளம்பரம்-

காசி பெருமைகள்:

அதேபோல் கபீர் இரண்டு அடிகளில் பாடி இருக்கிறார். தமிழில் திருவள்ளுவர் திருக்குறளை இரண்டே அடிகளில் எழுதி இருக்கிறார். கபீர் பாடியதில் 8 சீர்கள் அமைந்திருக்கின்றன. திருக்குறளில் 7 சீர்கள் தான். கபீர் தாஸ் ஆன்மீகம் பற்றிப் பாட, திருவள்ளுவர் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று முப்பால்களாக அதை 1330 பாடல்களாக எழுதினார். மேலும், கர்நாடக சங்கீதத்தின் மாமேதை என்று போற்றக்கூடிய மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் இங்கே வந்து நிறைந்து பல இடங்களில் தேசாந்திரமாகப் பாடி சென்றவர்.

மோடி எண்ணம் குறித்து சொன்னது:

கங்கை நதிகளில் மூழ்கி எழும்போது அவர் கையிலே சரஸ்வதி தேவி வீணையைப் பரிசளித்திருக்கிறார். அந்த வீணை இன்னும் இருக்கிறது. அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். அப்படிப்பட்ட பெருமை மிகுந்த இந்த காசி நகரிலே தமிழ்ச் சங்கமத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற எண்ணம் நமது பிரதமர் அவர்களுக்கு எப்படித் தோன்றியது என்பதை நான் மிகவும் வியந்து கொண்டிருக்கிறேன். மேலும், இந்த ஆலோசனை தோன்றியதற்காக உங்களை எண்ணி மகிழ்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement