தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 80ஸ் காலகட்டம் துவங்கி இவர் இசையை விரும்பாத ரசிகர்கள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.மேலும், 80ஸ் காலகட்டத்தில் ஹீரோ ஹீரோயினை புக் செய்யும் முன்பாக இளையராஜாவை தான் முதலில் இயக்குனர்கள் புக் செய்வார்கள். அதற்கு காரணம் இவர் இசையமைத்தால் அந்த படம் நிச்சயம் ஹிட் என்று நம்பினார்கள். இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் பல உள்ளது.
— மீனவ ஐயர் (@Meenavan_Iyar) June 2, 2019
என்னதான் இசையில் ஜாம்பவான் என்றாலும் பொது வாழ்வு என்று வந்துவிட்டால் இளையராஜா ஒரு டெரர் பீஸ் தான். இதுவரை பல்வேறு முறை பல விதமாக சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் இளையராஜா. அதிலும் சமூக வலைத்தளம் வந்த காலம் முதல் இவர் அடிக்கடி ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார். இவரது தலைக்கனமான பேச்சுக்கள் பல முறை ரசிகர்களை எரிச்சலடைய செய்துள்ளது.
எஸ் பி பி தனது பாடல்களை பாடக் கூடாது என்று இவர் சொன்னதில் இருந்தே இவரை சமுக வலைதளத்தில் நோட் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து ஒரு மேடையில் தண்ணீர் கொண்டு வந்த செக்குரிட்டியை திட்டி தீர்த்தார் அப்போது அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டும் அவரை வசைபாடினார். அதோடு மட்டும் நிற்காமல் என் இசையால் தான் நீங்கள் எல்லாம் வாழ்கிறீர்கள் என்று ரசிகர்களை பார்த்து சொன்னார்.
The real ilayaraja ,
— S Vijayapandian (@vipana7) June 2, 2021
இளையராஜா வின் முகம்
Happy birthday isaignani ilayaraja.
Sorry Rohini #HBDilayaraja pic.twitter.com/QeutFqvA97
இன்னொரு மேடையில் ஷங்கர் மற்றும் இளையராஜா மேடையில் இருந்த போது தொகுப்பாளினியாக இருந்த ரோகினி நீங்கள் இருவரும் எப்போது ஒன்றாக படத்தில் பணியாற்றப் போகிறீர்கள் என்று எதார்த்தமாக கேட்க உடனே டென்சன் ஆன இளையராஜா 'நீ என்ன எனக்கு சான்ஸ் வாங்கி கொடுக்கிறியா' என்று கடுமையாக பேசி இருந்தார். அதே போல பார்த்திபனை கூட ஒரு மேடையில் உனக்கு மியூசிக்கை பற்றி என்ன தெரியும் என்று கேட்டு இருந்தார்.
இதற்க்கு எல்லாம் மேலாக சமீபத்தில் மறைந்த மனோபாலாவின் இறப்பிற்கு இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் இளையராஜா. அதில் என்னை பார்ப்பதற்காக நான் வீட்டிலிருந்து கிளம்பிய உடனே கோடம்பாக்கம் பக்கத்தில் காத்திருந்த எத்தனையோ இயக்குனர்களின் மனோபாலாவும் ஒருவர். பின் நாட்களில் நடிகரானாலும், படங்களை இயக்கினாலும் என்னிடம் வந்து அப்போது நடக்கும் விஷயங்களை சொல்லி விடுவார்' என்று கூறி இருந்தார்.
View this post on Instagram
இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பலர் ' இது இரங்கல் பதிவு போல தெரியவில்லை, உங்களின் பெருமையை சொல்லும் பதிவு போல தெரிகிறது என்று விமர்சித்தனர். இப்படி இளையராஜா குறித்து பல சர்ச்சைகள். இதையெல்லாம் அவர் தெரிந்து தான் செய்கிறாரா இல்லை தெரியாமல் செய்கிறாரா என்று சந்தேகம் பலருக்கும் இருந்து வருகிறது. இப்படி இசையில் ஞானியாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் இளையராஜா மீது பலருக்கும் விமர்சனம் உண்டு.
இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இளையராஜா தனது 80வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். அவருக்கு பல்வேறு துறை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என்று வாழ்த்துக்களை கூறி வந்த நிலையில் சினேகன் கன்னிகா ஜோடி அவரது இல்லத்திற்கே சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி அவரிடம் இருந்து ஆசிர்வாதம் வாங்கி இருக்கிறார்கள். அந்த வீடியோவை கன்னிகா தங்களுடைய விசாரணை பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் இந்த வீடியோவை கண்ட ரசிகர் ஒருவர் 'ஆசீர்வாதம் பண்ற போது செருப்ப கழட்டனும்னு தோனல அவருக்கு. ஆசீர்வாதம் வாங்கும் போது கால தொட்டு தான் வாங்குவாங்க. செருப்ப கழட்டி இருக்கலாம் என்று கமண்ட் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த கன்னிகா 'அவர தப்பா நினைக்காதீங்க.அவருக்கு சில மெடிக்கல் பிரச்சனைனால அவர் எப்போதும் வீட்ல கூட சாக்ஸ் அல்லது செருப்பு போட்டு தான் இருப்பாங்க' என்று பதில் கூறியுள்ளார்.






