இளையராஜாவின் மோடி கருத்திற்கு பின், கருப்பு உடை அணிந்து யுவன் போட்ட பதவி – இந்தி தெரியாது போடாக்கு பின் அடுத்த சம்பவமா ?

0
440
ilayaraja
- Advertisement -

பிரதமர் மோடி குறித்து இளையராஜா சொன்ன கருத்து பேசுபொருளாக ஆகி இருக்கும் நிலையில் தற்போது யுவன் ஷங்கர் ராஜாவின் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் இசையின் ஜாம்பவனக பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வருபவர் இளையராஜா. இசையின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட இவர் பல விருதுகளையும் அள்ளிக்குவித்து இருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை இவர் பெற்றுள்ளார். இந்திய அரசின் படத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-328-1024x528.jpg

அதுமட்டும் இல்லாமல் இளையராஜாவுக்கு இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது 2018 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்பட்டது. சமீபத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் புத்தக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அப்போது மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகம் வெளியாகி இருந்தது.இந்த புத்தகத்திற்கு முன்னுரையை இளையராஜா எழுதி இருந்தார். மேலும், இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இளையராஜாகூறி இருந்தது,

- Advertisement -

சர்ச்சையான இளையராஜாவின் கருத்து :

பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் கீழ் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேறிக் கொண்டு இருப்பதாக இருக்கிறது. இந்தியாவின் உள்கட்டமைப்பு மிக சிறப்பாக அமைக்கப்பட்டு வருகிறது. சமூகநீதி விஷயத்திலும் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.குறிப்பாக முத்தலாக் உள்ளிட்ட சட்டத்தின் மூலம் பெண்கள் வாழ்வில் மாற்றத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். தற்போது இதனை அம்பேத்கார் கண்டால் பெருமைப்படுவார்.

கருத்தை திரும்ப பெற மாட்டேன் :

இளையராஜாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி குறித்து எழுதிய கருத்தை திரும்ப பெற மாட்டேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா தனது சகோதரர் கங்கை அமரனிடம் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் மோடி குறித்து இளையராஜா பேசியது பற்றி அவருக்கே போன் செய்து கேட்டேன். உங்களை நிறைய பேர் விமர்சிக்கிறார்களே என்று நேற்று இளையராஜாவிடம் கேட்டேன்.

-விளம்பரம்-

யுவனின் இன்ஸ்டா பதிவு :

அதற்கு பிரதமர் மோடி குறித்து எழுதிய கருத்தை திரும்ப பெற மாட்டேன் என்று இளையராஜா என்னிடம் சொன்னார். அது தன்னுடைய சொந்த கருத்து என்றார். அதே சமயம் தன்னுடைய கருத்து பற்றி மற்றவர்கள் சொல்லும் கருத்தை விமர்சிக்கவும் மாட்டேன் என்று என்னிடம் கூறினார் என்று கங்கை அமரன் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இளையராஜாவின் மகன் யுவன்ஷங்கர் ராஜாவின் இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது.

“கருப்பு திராவிடன்.. கர்வமான தமிழன்”

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடை அணிந்து இருக்கும் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கும் யுவன் ஷங்கர் ராஜா, “கருப்பு திராவிடன்.. கர்வமான தமிழன்” என பதிவிட்டுள்ளார். தனது தந்தை கருத்து சர்ச்சையாகியுள்ள நிலையில் யுவனின் இந்த பதிவு வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்தி தெரியாது போட என்ற டி – ஷர்ட்டை அணிந்து யுவன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement