கண்ணீருடன் பாட்டு பாடி மகளுக்கு பிரியா விடை கொடுத்த இளையராஜா – உருக்கமான வீடியோ

0
458
- Advertisement -

பவதாரணியின் பாடலை பாடி இளையராஜா தன் மகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாவே சோசியல் மீடியா முழுவதும் இளையராஜா மகள் பவதாரணி இறப்பு செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. இளையராஜாவின் மகள் பவதாரணி அவர்கள் மைடியர் குட்டி சாத்தான் என்ற படத்தின் மூலம் பாடகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். பின் இளையராஜாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒண்ணு என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பவதாரணி.

-விளம்பரம்-

இந்த பாடலுக்காக இவர் தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை வாங்கி இருந்தார். பின் இவர் தமிழில் எண்ணற்ற பாடல்களை பாடியிருந்தாலும் அவர் குறிப்பாக தன்னுடைய தந்தை மற்றும் சகோதரர் படங்களில் தான் அதிகம் பாடியிருக்கிறார். இவர் பாடுவது மட்டும் இல்லாமல் பல படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறார். இதனிடையே இவர் சபரி ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர்களுக்கு குழந்தையே இல்லை. சபரி ராஜன் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் பவதாரணி பெயரிலேயே வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பவதாரணி உடல்நிலை:

இப்படி ஒரு நிலையில் பவதாரணி உடல் நலக்குறைவு காரணமாக காலமாகி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பவதாரணிக்கு புற்றுநோய் இருந்திருக்கிறது. இதற்காக இவர் சமீப காலமாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். கிட்டத்தட்ட கடந்த ஐந்து மாதங்களாக அவர் இலங்கையில் சிகிச்சை மேற்கொண்டு வந்து இருக்கிறார். அதேபோல் இளையராஜாவும் இலங்கையில்தான் இருந்திருக்கிறார்.

பவதாரணி இறப்பு:

இவர் 28ஆம் தேதி வரை இருக்கும் மியூசிக் கான்செர்ட் நடைபெறுவதால் இவர் தன்னுடைய மகளை கவனித்துக் கொண்டு தன்னுடைய இசை வேலையும் செய்து இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் மூச்சு திணறல் ஏற்பட்டு பவதாரணி உயிரிழந்திருக்கிறார். தற்போது அவருக்கு வயது 47. மேலும், இவருடைய இறப்பு கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் இளையராஜா குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்து இருக்கிறர்கள். நேற்று முன் தினம் மாலை பவதாரணி உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.

-விளம்பரம்-

பவதாரணியின் உடல் நல்லடக்கம்:

பின் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலிக்காக பவதாரணி உடல் வைக்கப்பட்டிருந்தது. அங்கு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பிரபலங்கள் என பலருமே தங்களுடைய இரங்களை தெரிவித்து வந்தார்கள். இதை அடுத்து லோயர்கேம்ப் பகுதியில் இளையராஜாவிற்கு சொந்தமான இடத்தில் பவதாரணியின் உடலை அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இளையராஜாவின் உறவினர்கள் பலர் இதில் கலந்து கொண்டு இருந்தார்கள்.

இளையராஜா இறுதியாக பாடிய பாடல்:

இதில் இயக்குனர் பாரதிராஜா, பவதாரணி உடல் நல்லடக்கம் செய்யும் வரை இளையராஜாவுடன் இருந்து ஆறுதல் கூறி வந்தார். இதை அடுத்து குடும்ப சம்பிரதாய படி சடங்குகள் எல்லாம் செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழக்கப்பட்டது. பின் பவதாரணி பாடி தேசிய விருது பெற்ற மயில் போல பொண்ணு ஒன்னு கிளி போல பாட்டு ஒன்னு என்ற பாடலை இறுதியாக உறவினர்கள் அனைவரும் ஒன்றாக பாடி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.

Advertisement