ஷாலினியுடன் வெளியில் வந்த ஆத்விக். லேட்டஸ்ட் புகைப்படத்தை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்.

0
25323
Ajith-son
- Advertisement -

உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு உச்ச நட்சத்திரம் தான் நம்ம தல அஜித். சினிமா பிரபலங்களில் எவ்வோளவோ தம்பதியர்கள் வந்தாலும் முதலில் அனைவர் மனதில் தோன்றுவது அஜித்- ஷாலினி ஜோடி தான். 1999 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளிவந்த படம் அமர்க்களம் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து இருந்தார்கள். அதற்கு பின் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின்னர் நடிப்பை விட்டு குடும்பதத்தை கவனித்து வருகிறார் நடிகை ஷாலினி. கடைசியாக இவர் பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தில் தான் நடித்திருந்தார். திருமணத்திற்கு பின்னர் அஜித் – ஷாலினி தம்பதியருக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளார்கள்.

-விளம்பரம்-

- Advertisement -

பெரும்பாலும் தல அஜித் அவர்கள் தன்னுடைய குழந்தைகளை பொது நிகழ்ச்சிக்கு அழைத்து வருவதை தவிர்ப்பார். அவர் மீது விழும் ஸ்பாட்ர் லைட் வெளிச்சம் குழந்தைகள் மீது விழக் கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதே சமயம் ரசிகர்கள் தன்னுடன் எடுத்துக் கொள்ளும் செல்பியை எப்போதும் அஜித் விளக்கியது இல்லை. ரசிகர்கள் உடன் சந்தோசமாக நின்று போஸ் கொடுத்து செல்வார். ஆனால், அஜித்தின் குழந்தைகள் போட்டோவை சோசியல் மீடியாவில் பார்ப்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. ஆனாலும், விமான நிலையம், ஷாப்பிங், பொது இடங்கள் என இருக்கும் போது தல அஜித்– ஷாலினியின் குழந்தைகளின் புகைப்படங்களை பார்க்க முடியும். ஏதாவது ஒரு வகையில் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி இருக்கும்.

இதையும் பாருங்க : ‘உலகத்தில் இது போல 4 படம் தான் இருக்கிறது ‘பார்த்திபனின் அடுத்த வித்யாசமான முயற்சி.

-விளம்பரம்-

அதே போல தல அஜித்தின் செல்ல மகன் ஆத்விற்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ரசிகர்கள் மீது எந்த அளவிற்கு பாசம் வைத்துள்ளாரோ, அந்த அளவிற்கு அஜித் தன்னுடைய மகன், மகள் மீது அதிக பாசம் வைத்துள்ளார். ஷாலினியுடன் குட்டி தல ஆத்விக் நின்று கொண்டிருப்பது போன்ற போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் செம ட்ரெண்ட்டிங் ஆகியிருந்தது. குட்டி தல ஆத்விக் போட்டோக்களுக்கு பயங்கரமாக போஸ் கொடுத்து அப்பாவை மிஞ்சி விட்டார் என்றும் கூறி வருகிறார். இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆத்விக் போட்டோவை சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

தல அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விசுவாசம்,நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் மிகப் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் இணைந்து தல அஜித்தை வைத்து உருவாகி வருகிற படம் தான் வலிமை. இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலிமை படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள்.

Advertisement