வாட்ஸ் அப் புத்தாண்டு வாழ்த்து சொல்லியுள்ள பார்த்திபன், இளையராஜாவிடம் இருந்து வந்துள்ள ரிப்ளை.

0
635
parthiban
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் தன்னுடைய வித்தியாசமான கதையின் மூலம் தனெக்கென ஒரு பாதையை உருவாக்கியவர் நடிகர் பார்த்திபன். இவர் எப்போதும் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர். இவர் சினிமா துறையில் இயக்குனர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர். இவருடைய நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இவருடைய வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக வெளிவந்த “ஒத்த செருப்பு சைஸ் 7” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரே ஒருவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு பல விருதுகள் கூட குவிந்தது. கந்த ஆண்டு நடைபெற்ற 67 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு சிறந்த சவுண்ட் எஃபெக்ட் மற்றும் சிறந்த ஜூரிக்கான தேசிய விருது கிடைத்தது. அதே போல சிறந்த நடிகருக்கான தேசிய விருது இந்தாண்டு இருவருக்கு கிடைத்தது.

- Advertisement -

பார்த்திபனுக்கு இசையமைப்பாளர் இளையராஜா மீது எந்த அளவிற்கு மரியாதை இருக்கிறது என்பதை அவர் பல முறை நிரூபித்து இருக்கிறார். அதிலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விருது விழா ஒன்றில் பார்த்திபன், இளையராஜாவிடம் வயலினை கொடுத்து வாசிக்க கேட்ட போது ‘உனக்கு மியூசிக்க பத்தி தெரியுமா’ என்று இளையராஜா கேட்ட வீடியோவும் வைரலானது.

மேலும், இளையராஜாவை பலரும் விமர்சித்தனர். ஆனால், இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய பார்த்திபன் ‘ஒரு சிலரிடம் அடிமையாக இருப்பது எனக்கு பெருமை, அப்படிபட்ட ஒரு நபர் தான் ராஜா சார்’ என்றார். இதே போல கடந்த ஆண்டு ஜூன் மாதம் கூட இளையராஜாவின் பிறந்தநாளில் பார்த்திபன் வாழ்த்து தெரிவித்து தன் முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர் ‘ இந்தாள் உங்களையே மேடையில் வைத்து அசிங்கப்படுத்தியவர் தானே என்று பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இதற்கு பதில் அளித்த பார்த்திபன், அவரே ஒரு மேடை, அவரே ஒரு அனுபவம் என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இளையராஜாவிற்கு வாட்ஸ் அப்பில் வாழ்த்து சொன்ன ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை பார்த்திபன் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘உங்கள் வாழ்த்தையே வரமென யாசிக்கும் என்று பார்த்திபன் அனுப்பி இருக்கிறார்.

இதற்கு இளையராஜாவிடம் இருந்து ‘என்கூடவே எப்போதும் இருக்கிறாய் இருந்தாலும் வாழ்த்துக்கள்’ என்று பதில் வந்து இருக்கிறது. இதனை தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பார்த்திபன் ‘சில வார்த்தைகள் கண்ணில் படும்போதே உயிரிலும் பட்டுத் தெறித்து சப்தமற்ற அழுகை வெடித்து சலனமற்று இயங்கச் செய்கிறது!’ என்று பதிவிட்டு இளையாராவின் வாழ்த்துக்களால் பூரித்து போய் இருக்கிறார்.

Advertisement