‘உன் மாமனார் ரஜினி தான் காரணம் ‘ விழாவில் தனுஷை எழுந்து நிக்க வைத்து கூறிய இளையராஜா. தனுஷின் ரியாக்ஷன்.

0
535
dhanush
- Advertisement -

நிகழ்ச்சியில் இளையராஜா தனுஷை பார்த்து ‘ரஜினிகாந்த் தான் உனது மாமனார்’ என்று கூறி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனிடையே சமீபத்தில் 18 ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அறிவித்து இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

மேலும், இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் பல முயற்சிகள் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட ஐஸ்வர்யாவை விவாகரத்துச் செய்வதில் தனுஷ் மனம் மாறி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதோடு பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தனுஷ் தி கிரேட் மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார்.

- Advertisement -

தனுஷின் திரைப்பயணம்:

இதை தொடர்ந்து தனுஷ் அவர்கள் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி, sir ஆகிய பல படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பத்தை இயக்கி வெளியிட்டு இருக்கிறார். பிறகு ஐஸ்வர்யா படம் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. சமீபத்தில் தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார். படத்தை படத்தில் மாளவிகா மோகனன், மகேந்திரன், சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

ஐஸ்வர்யா குறித்து தனுஷ் பதிவிட்ட பதிவு:

இதனிடையியே இந்த படம் ரிலீஸ் செய்தியை தனுஷ் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த ட்வீட்டை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைக்ஸ் செய்து இருந்தார். அதேபோல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் பயணி என்ற ஆல்பத்தை பார்த்து தனுஷூம் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து, ‘தோழி’ ஐஸ்வர்யாவின் பயணி ஆல்பம் வெற்றியடைய வாழ்த்துகள் என கூறி இருந்தார். தனுஷின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து கமெண்ட் போட்டு இருந்தார்கள். இந்த நிலையில் தனுஷ் அவர்கள் சமீபத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தார்.

-விளம்பரம்-

இளையராஜா நடத்திய இசை கச்சேரி:

இதை இளையராஜா தான் நடத்தினார். தமிழ் சினிமா உலகில் இசை ஜாம்பவனாக திகழ்பவர் இளையராஜா. இவர் சில வருடங்களாகவே இசைக்கச்சேரிகள் நடத்துவதில் அதிக ஆக்டிவாக இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் Rock With Raja என்ற கச்சேரி நடத்தி இருந்தார். இந்த நிகழ்ச்சி சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. அதில் தனுஷ் தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ரா உடன் கலந்துகொண்டார். அதோடு இந்த நிகழ்ச்சிக்கு கங்கை அமரன், பாடகர் மனோ, எஸ் பி பி சரண், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பலர் வருகை தந்திருந்தனர். நிகழ்ச்சியை ஜனனி ஜனனி என்ற பாடலோடு இளையராஜா துவக்கி வைத்தார். தொடர்ந்து மேடையில் இருந்த பாடகிகளோடு இணைந்து இளையராஜா பல பாடல்களைப் பாடியிருந்தார்.

தனுஷிடம் இளையராஜா சொன்னது:

பின் இவர் என்னுள்ளே என்னுள்ளே என்ற பாடலை பாடி முடித்ததும் முன்வரிசையில் அமைந்திருந்த தனுஷை எழுந்து நிற்க கூறினார். பின் இந்தப் பாடல் இவ்வளவு நன்றாக வர உன்னுடைய மாமனார் ரஜினிகாந்த் தான் காரணம். நடிகர் ரஜினிகாந்த் ரசனையோடு காட்சியின் சூழ்நிலையை விளக்கியதே காரணம் என்றார். அதற்கு தனுஷ் புன்னகைத்தவாறு ரசித்து கை தட்டினார். இப்படி பல பேர் சூழ்ந்து இருக்கும் இடத்தில் இளையராஜா தனுஷை பார்த்து உன்னுடைய மாமனார் ரஜினிகாந்த் தான் என்று அழுத்தி கூறியது தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக உள்ளது. அதுமட்டும் இல்லாமல் நிகழ்ச்சியில் தனுஷ் மேடை ஏறி தனது மகனுக்காக இளையராஜாவிடம் அனுமதி வாங்கி ஒரு எமோஷனலான பாடல் பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement