சின்ன வயசிலே ஜாதகம் பார்த்தப்பவே என் மகள் ஜீவாவை ராசய்யாவுக்குத் தான் கொடுக்கணும்னு முடிவு பண்ணியிருந்தோம் – ராஜாவின் சகோதரி.

0
2175
Ilayaraja
- Advertisement -

இளையராஜாவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசையின் ஜாம்பவனாக பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வருபவர் இளையராஜா. இவர் இசையின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து இருக்கிறார். மேலும், இவரின் இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

ஏன்னா, அந்த அளவிற்கு தன்னுடைய இசையால் எல்லோரையும் கட்டிபோட்டவர் இளையராஜா. 1976 ஆம் ஆண்டு இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

இளையராஜா திரைப்பயணம்:

இவர் இசையமைப்பாளர், பாடகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், இவர் பாடல் வரிகளை எழுதுபவர் என்று பலருக்கும் தெரியாத ஒன்று. அதோடு இவர் கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்றவர். இதனால் இவருக்கு இந்திய அரசின் படத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய அரசின் பத்ம விருதுகளில் விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் இவருக்கு பத்ம விபூஷண், தேசிய விருது என பல விருதுகளை பெற்று இருக்கிறார்.

இளையராஜா குறித்த சர்ச்சை:

தற்போது இவர் படங்களில் பிசியாக இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அம்பேத்கரை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து பலரும் பல்வேறு விமர்சனங்கள் செய்து இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இளையராஜாவுக்கு Mp சீட் கிடைத்து இருக்கிறது.

-விளம்பரம்-

இப்படி சினிமாவிலும், அரசியலிலும் பிசியாக இருக்கிறார் இளையராஜா. இந்நிலையில் இளையராஜாவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, இளையராஜாவின் மூத்த சகோதரி கமலம்மாள் கூறியிருப்பது, சின்ன வயதிலேயே ஜாதகம் பார்க்கும் போது என் மகள் ஜீவாவை ராசையாவுக்கு தான் கொடுக்க வேண்டும் என்று முடிவு பண்ணி இருந்தோம். அதன்படியே பண்ணைபுரத்தில் எளிமையாக இவர்களுடைய திருமணம் முடிந்தது என்று கூறி இருக்கிறார். இந்த தகவல் மனாவின் நதிமூலம் என்ற நூலிலிருந்து பெறப்பட்டிருக்கிறது. தற்போது இளையராஜா உடைய திருமண புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகிவருகிறது.

Advertisement