தமிழில் ரவிகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘கேடி’ படத்தில் அறிமுகமானவர் நடிகை இலியானா டி க்ரூஸ். அதன் பின்னர் தமிழில் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்தார். திறமை வாய்ந்த நடிகையான இவருக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வாய்ப்புகள் கொட்ட துவங்கியது.
அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் அடித்து விட்ட இவர் தற்போது தனது பாய் பிரண்டுடன் உலகம் சுற்றிவந்தார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த தன்னுடைய போட்டோ கிராபர் ஆன்டருவுடன் தற்போது லிவ் இன் டூ கெதரில் இருக்கிறார். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகின்றானர்.
கடந்த 2015ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாக செய்திகள் வந்தது. ஆனால், இருவரும் லிவ் இன் டு கெதரில் தான் உள்ளனர் என பின்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது தனது ‘கணவன் ஆன்டரு எடுத்தாக இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்திருந்தார்.
இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இலியானா மற்றும் ஆண்ட்ரூவ் இருவரும் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதில்லை. மேலும் இருவரும் இடம்பெற்றுள்ள புகைப்படங்களையும் இருவருமே தங்களது சமூகவலைதள பக்கங்களிலிருந்து நீக்கியுள்ளனர்.