தினமும் 12 மாத்திரை சாப்பிட்டேன், இதுனால அதையும் விட்டுட்டேன். இலியானாகா இந்த நிலை.

0
21335
illeana
- Advertisement -

“இருக்கானா இடுப்பிருக்கானா” என்ற பாடலின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் நடிகை இலியானா. இவர் தென்னிந்திய திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் ஒரு மாடலிங்கும் ஆவார். மேலும், இவர் ‘தேவதாசு’ எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து இவர் ‘கேடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின் விஜய் அவர்கள் நடிப்பில் வந்த ‘நண்பன்’ படத்தில் நடித்திருந்தார். இவர் அதிகமாக தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் தான் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இலியானா பாலிவுட்டில் தனெக்கென ஒரு அங்கீகாரத்தையும் பதித்தவர். நடிகை இலியானா அவர்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்த போட்டோகிராஃபர் ஆண்ட்ரூ நீபோன் என்பவரை காதலித்து வந்தது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-
Image result for Ileana D’Cruz fat"

- Advertisement -

இதனைத்தொடர்ந்து இலியானா காதல் குறித்து சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் வந்தன. சில ஆண்டுகளாக நடிகை இலியானா தன் காதலன் ஆண்ட்ரூவை காதலிக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். பின் அவரை ’பெஸ்ட் ஹபி எவர்’ எனவும் இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டிருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர்கள் காதல் செய்து கொண்டிருக்கும் போது வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து இருவருக்கும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்களா??? என்று பலபேர் கேள்விகளை எழுதி இருந்தார்கள். இதனைத்தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது என கூறப்படுகிறது. அதனால், சில மாதங்களுக்கு முன் இவர்கள் உடைய காதல் பிரேக் அப் ஆகிவிட்டதாக இணையங்களில் பேசப்பட்டு வருகிறது.

இதையும் பாருங்க : ஷாலினி பிறந்தநாளுக்கு லீலா பேலஸில் அஜித் கொடுத்த சர்ப்ரைஸ். பகிரும் ஷாலினியின் தோழிகள்.

மேலும், இது குறித்து பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள். இந்நிலையில் நடிகை இலியானா ஆமாம் எங்கள் காதல் முடிவுக்கு வந்தது என்று கூறியிருந்தனர். இப்படி நெருக்கமாக பழகிய இவர்கள் திடீரென்று காதல் முறிந்தது என்று கூறியது ரசிகர்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் இவர் சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து கொஞ்சம் விலகி உள்ளார். தற்போது இலியானா அவர்களின் காதல் பிரிவிற்கு பிறகு இந்தியா திரும்பியுள்ளார். மேலும், அவரை பொது இடங்களில் அடிக்கடி பார்க்க முடிகிறது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், அவர் காதல் பிரேக் அப் குறித்து ஒரு பேட்டியில் மிக வருத்தத்துடன் பேசியுள்ளார்.

-விளம்பரம்-
Image result for Ileana D’Cruz lover ]"

அதில் அவர் கூறியது, நீங்கள் இது போன்ற சூழ்நிலையை சந்திக்கும் போது தான் உங்கள் குடும்பத்தினர், நண்பனின் மதிப்பு உங்களுக்கு புரியும். ‘தேவை இல்லை என முடிவான பிறகு அதைப் பேசுவதில் ஒரு அர்த்தமும் இல்லை. என் வாழ்க்கையில் என்னை நான் தானே பார்த்துக் கொள்ளவேண்டும் என உணர்ந்தேன்’ என தெரிவித்துள்ளார். மேலும், சென்ற வருடம் முழுவதும் நடிகை இலியானா அவர்கள் உடல் நலக்குறைவால் சிகிச்சையில் இருந்ததாக தெரிய வந்தது. அதுமட்டுமில்லாமல் சிகிச்சையின் போது ஒரு நாளைக்கு 12 மாத்திரைகள் சாப்பிடுவாராம்.

அதனால் தான் தன் உடல் தோற்றம் இப்படி மாறிவிட்டது என அடிக்கடி கூறியுள்ளார். மேலும், வாரம் வாரம் டெஸ்டுக்கு செல்ல வேண்டும். அதனால் தான் சினிமாவில் நடிப்பதை நிறுத்தியிருந்தார். மேலும், உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று ஜிம்மிற்கு செல்ல தொடங்கினார். வெளியே வரும் போதும்,போகும் போதும் ரசிகர்கள் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும்,இதனாலேயே ஜிம்முக்கு போவதை தவிர்த்து விட்டேன் என்றும் கூறினார். இந்நிலையில் கூடிய விரைவில் நான் படங்களில் நடிப்பேன் என்றும் கூறியிருந்தார்.

Advertisement