ஷாலினி பிறந்தநாளுக்கு லீலா பேலஸில் அஜித் கொடுத்த சர்ப்ரைஸ். பகிரும் ஷாலினியின் தோழிகள்.

0
34806
ajith-shalini
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்தின் மனைவி ஷாலினியும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த குழந்தை நட்சத்திரமாக இருந்து வந்தார். நடிகை ஷாலினி அவர்கள் 1979 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள திருவல்லா என்ற பகுதியில் பிறந்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நடிகை ஷாலினி தனது பிறந்தநாளை கொண்டாடினார். ஷாலினியின் பிறந்தநாளை அஜித் ரசிகர்கள் அன்னதானம், நல திட்டம் என்று மிகவும் சிறப்பாக கொண்டாடினார்கள். மேலும், அவருக்கு ட்விட்டரில் #HBDShaliniAjith, #HappyBirthdaySHALINIAJITH என்ற ஹேஷ்டேக் உருவாக்கி அதன் மூலம் அஜித் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்

-விளம்பரம்-
shalini-ajith

இந்த நிலையில் ஷாலினியின் பிறந்தநாளை அவருடன் கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா பள்ளியில் படித்த தோழிகளி சமீபத்தில் பேட்டி ஒன்றில் சில சுவாரசியமான தகவலை பகிர்ந்து உள்ளார்கள். அதில் நடிகர் அஜித் ,ஷாலினியின் தாய் தந்தையரை சந்தித்து பள்ளிப்பருவத்தில் ஷாலினிக்கு நெருக்கமாக இருந்த நபர்கள் யார் யார் என்பதை அறிந்து கொண்டு அவர்களை மட்டும் ஷாலினியின் பிறந்தநாளுக்கு அழைப்பை விடுக்க சொல்லியிருக்கிறார். மேலும், ஷாலினி எதிர்பாராத நேரத்தில் அவர் முன்னால் போய் நின்று சர்ப்ரைஸ் தர வேண்டும் என்பதுதான் திட்டமாம்.

- Advertisement -

அஜித், ஷாலினிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்டதை ஒட்டி சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டி இருக்கும் லீலா பேலஸ் ஹோட்டலுக்கு அனைவரையும் டின்னருக்கு வரச் சொல்லியிருக்கிறார் அஜித். ஏனெனில் லீலா பேலஸில் சிபியு அறையிலிருந்து கடலை ரசிப்பது ஷாலினிக்கு மிகவும் பிடிக்குமாம். மேலும், ஷாலினியிடம் நடிகர் அஜித் குடும்பத்துடன் ஒரு டின்னர் போயிட்டு வரலாம் என்று மட்டும்தான் கூறி இருந்தாராம். ஆனால்,ஷாலினியின் தோழிகள் முன்கூட்டியே ஹோட்டலுக்கு சென்று இருக்கிறார்கள். சொன்னபடியே சரியான நேரத்திற்கு அஜித்தும் வந்திருக்கிறார். மேலும் ,ஹோட்டலில் உள்ள ஒரு அறை முழுக்க ஷாலினியின் புகைப்படங்கள் மற்றும் திரையில் ஷாலினி என்று எழுதப்பட்ட வீடியோவும் ஓடிக்கொண்டிருந்ததாம். ஆனால், இது எதுவும் ஷாலினிக்கு முன்கூட்டியே தெரியாது என்கிறார்கள் ஷாலினியின் தோழிகள்.

பின்னர் ஷாலினியின் தோழிகள் அனைவரும் ஒவ்வொருவராக சென்று தனி தனியாக ஷாலினியை சந்தித்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்கள். அவர்களை கண்டதுமே ‘நீங்க எப்படி இங்க என்று மிகவும் சந்தோஷப்பட்டாராம் மேலும் ஷாலினி தனது தோழிகளிடம் ‘இது பெரிய பங்காற்ற இருக்கே ஆனா இது யாரோட ஆட்டம்னு எனக்கு தெரியும் என்று கூறியவாரு அஜித்தை காதல் பார்வை பார்த்தாராம். அதனை பாக்கணுமே என்று மெய் சிலிர்க்கிறார்கள் ஷாலினியின் பள்ளி தோழிகள். பின்னர் சிறப்பாக பார்ட்டி முடிந்து அனைவரும் ஒரே குதுகலமாக இருந்துள்ளார்களாம்.

-விளம்பரம்-
Advertisement