“இருக்கானா இடுப்பிருக்கானா” என்ற பாடலின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் நடிகை இலியானா. இவர் தென்னிந்திய திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் ஒரு மாடலிங்கும் ஆவார். மேலும், இவர் ‘தேவதாசு’ எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து இவர் ‘கேடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின் விஜய் அவர்கள் நடிப்பில் வந்த ‘நண்பன்’ படத்தில் நடித்திருந்தார். இவர் அதிகமாக தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் தான் நடித்துவந்தார்.
அதுமட்டுமில்லாமல் இலியானா பாலிவுட்டில் தனெக்கென ஒரு அங்கீகாரத்தையும் பதித்தவர். நடிகை இலியானா அவர்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்த போட்டோகிராஃபர் ஆண்ட்ரூ நீபோன் என்பவரை காதலித்து வந்தது அனைவருக்கும் தெரிந்ததே. சில ஆண்டுகளாக நடிகை இலியானா தன் காதலன் ஆண்ட்ரூவை காதலிக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.
இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது என கூறப்படுகிறது. அதனால், சில மாதங்களுக்கு முன் இவர்கள் உடைய காதல் பிரேக் அப் ஆகிவிட்டதாக அறிவித்திருந்தார்.காதல் தோல்வியால் கொஞ்சம் மன அழுத்தத்தில் இருந்த இலியானா தற்போது அதில் இருந்து மீண்டு புத்துணர்ச்சியாக மாறியுள்ளார். சமீப காலமாக உடல் எடை கூடி குண்டாக இருந்த இலியானா தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார்,
அதுவும் தென்னிந்திய பக்கம் வரலாம் என்றும் முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இலியானா நீச்சலுடையில் நீருக்கு அடியில் கடற்கன்னியை போல நீந்திய புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் கடற் கன்னியை போல உள்ளீர்கள் என்று கமன்ட்களை குவித்து வருகின்றனர்.