காணாமல் போய்க்கொண்டிருக்கும் லிஸ்டில் பிரசாத் ஸ்டூடியோவும் சேர வேண்டும் -புதிய ஸ்டூடியோ ஆரம்பித்த இளையராஜா பேட்டி.

0
2173
ilaya
- Advertisement -

சினிமா திரையுலகில் இசைஞானி இளையராஜாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சின்ன குழந்தையை கேட்டால் கூட சொல்லிவிடும் அந்த அளவிற்கு இசையில் சிறந்து விளங்கியவர். இவர் இசைத்துறையில் பண்ணாத சாதனைகளே இல்லை. மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சமீபத்தில் கலை பயணத்தை பாராட்டி பிரம்மாண்ட விழா ஒன்று கூட நடத்தப்பட்டது. அதே போல இளையராஜா கடந்த சில காலமாகவே பல்வேறு சர்ச்சைகளில், சிக்கல்களில் சிக்கி வருகிறார். இந்த நிலையில் இசைத்துறையின் ஜாம்பவானாக விளங்கிய இளையராஜாவின் இசை கோவிலாக இருந்த பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து இளையராஜா வெளியேற்றப் பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இளையராஜா அவர்கள் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தான் 41 ஆண்டுகளாக தன்னுடைய இசை பயணத்தை நடத்தி வருகிறார். மேலும், ரஜினிகாந்த்,கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, விஜய் என்று சினிமா துறையில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படத்திற்கு இசை அமைத்தவர். அதுமட்டும் இல்லாமல் இவருடைய பாடல்கள் எல்லாம் தற்போது உள்ள இளைஞர்கள் மனதையும் கவர்ந்த பாடல்கள் ஆகும். இப்படி புகழ் பெற்ற பாடல்களை உருவாக்கிய இசை கோவில் “பிரசாத் ஸ்டூடியோ”.

- Advertisement -

இந்தநிலையில், பிரசாத் ஸ்டூடியோ இடத்தில் இருந்து இளையராஜா வெளியேற வேண்டும் என ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இடத்தைக் காலி செய்வது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையேயான வழக்கு சென்னை 17-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இப்படி ஒரு நிலையில்  தனியாக ஸ்டுடியோ உருவாக்குவதற்காக கோடம்பாக்கத்தில் இருந்த எம்.எம். திரையரங்க வளாகத்தை விலைக்கு வாங்கிய இளையராஜா இன்று (பிப்ரவரி 3) இளையராஜா தனது இசையமைப்புப் பணிகளை புதிய ஸ்டுடியோவில் தொடங்கினார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சூரி நடிக்கும் படத்துக்கான பாடலுடன் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோ பணிபுரியத் தொடங்கியது. இதை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய போது தமிழ் ரசிகர்களுக்கு இனி எந்த மாதிரியான பாடல்கள் எல்லாம் கிடைக்கும். என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்ற கேள்விக்கு இளையராஜா பதில் கூறுகையில், “மழை கொட்டும் நேரத்தில் கொட்டப் போகிறது. இசை எந்தச் சமயத்தில் எப்படி வருகிறதோ அப்படித்தான் வரும். நாங்கள் அமைக்கும் இசையைத்தான் அவர்கள் கேட்டாக வேண்டும். அது தலையெழுத்து. மாற்ற முடியாது. எப்படிப் பாடல்கள் போடுவீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வது? அதை யாராலும் சொல்ல முடியாது. மழை எப்போது வரும் என்று மழையிடம் கேட்க முடியுமா? என்று பதில் அளித்தார்.

-விளம்பரம்-

அதே போல பிரசாத் ஸ்டூடியோ பற்றி பேசிய இளையராஜா இங்கே இருந்த ஸ்டூடியோக்கள் வேறு எங்கும் இல்லாமல் இருந்தது. ஆனால், அந்தஸ்டூடியோ எல்லாம் இப்போது காணவில்லை. ஜெமினி, வாஹினி, சாரதா, கோல்டன், ஏவிஎம் விஜயா என்று பல ஸ்டூடியோக்கள் காணும். இப்படி காணாமல் போய்க்கொண்டிருக்கும் லிஸ்டில் பிரசாத் ஸ்டூடியோவும் சேர வேண்டும் என்று நான் வெளியில் வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார் இளையராஜா

Advertisement