“இமைக்கா நொடிகள்” திரை விமர்சனம்.!

0
1119
Imaikaa-Nodigal

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் நயன்தாரா நடிப்பில், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியாகியுள்ள “இமைக்கா நொடிகள் ” படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம்.

படம்:- இமைக்கா நொடிகள்
இயக்குனர் :- அஜய் ஞானமுத்து
நடிகர்கள்:- நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா
தயாரிப்பு :- கேமியோ பிலிம் இந்தியா
வெளியான தேதி:- 30-08-2018

தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான “டிமாண்டி காலனி ” என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் இரண்டாவது படம் தான் “இமைக்கா நொடிகள் ” . படத்தில் விஜய் சேதுபதி , அதர்வா நடித்திருந்தாலும் இதில் ஹீரோ என்னவோ நடிகை நயன்தாரா தான். த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஆக்ஷன், ட்ராமா, காதல் என்று வழக்கமான மசாலாவையும் தூவி இருக்கிறார் இயக்குனர்.

கதைக்களம்:

முற்றிலும் திரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் முழுக்க முழுக்க நயன்தாராவை வைத்து தான் கதை நகர்கிறது. இந்த படத்தின் கதை பெங்களூரில் நடக்கிறது. பெங்களூரில் ஒரு வி ஐ பி குடும்பத்தில் இருக்கும் நபர்கள் தொடர்ச்சியாக கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த கொலையை கண்டுபிடிக்கும் ஒரு சி பி ஐ அதிகாரியாக நயன்தாரா நியமிக்கபடுகிறார்.

இந்த தொடர் கொலைகளை செய்யும் அந்த கொலையாளி யார் என்று நயன்தாரா மும்மரமாக தேடி அலைந்து கொண்டிருக்கும் போது நயன்தாராவின் தம்பியாக இருக்கும் காதலி ரஷி கண்ணாவை அந்த சீரியல் கில்லர் கடத்தி விடுகிறார். பின்னர் அதர்வா தான் அந்த சீரியல் கில்லர் என்று போலீஸ் அவரை குறி வைக்கிறது. ஆனால், இந்த சீரியல் கொலைகளை செய்து வருவது அனுராக் காஷ்யப் தான் என்று இரண்டாம் பாதியில் தெரிகிறது. ஆனால், அதனை பல ட்விஸ்ட்களை வைத்து நமக்கு காட்டி இருக்கிறார் இயக்குனர். நயன்தாரா , அந்த சீரியல் கில்லரை எப்படி கண்டுபிடிக்கிறார். அதர்வா, தான் நிரபராதி என்று நிறூபித்து தனது காதலியை கண்டு பிடிக்கிறாரா இல்லையா என்பது தான் கதை.

படத்தின் பாசிட்டிவ்:

எப்போதும் போல நடிகை நயன்தாரா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். திரில்லர் படத்திற்கு உண்டான அணைத்து அம்சங்களையும் இயக்குனர் கையாண்டுள்ளார். இரண்டாம் பாதியில் இருக்கும் ட்விஸ்ட்கள் ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்தாக அமைந்துள்ளது. வில்லனாக நடித்துள்ள அனுராக் காஷ்யப்பின் வில்லத்தனம் நன்றாகவேய எடுபட்டுள்ளது. மேலும், விஜய் சேத்துபதி படத்தில் சில நேரங்களே தோன்றினாலும் நயன்தாரா- விஜய் சேதுபதி காம்போ பார்ப்பதற்கு சோ க்யூட் என்பது போல இருக்கிறது. இசையும் ஹிப் ஹாப் தமிழா நன்றாகவே அமைத்துள்ளார்.

nayanthara

மைனஸ்:

படத்தின் முக்கிய மைனஸ் படத்தின் இழுவை தான். படம் கிட்டத்தட்ட சுமார் 3 மணி நேரம் ஓடுகிறது. இதனால் படத்தின் சுவாரசியம் ஒரு சில காட்சிகளில் ஜவ்வாக இழுக்கிறது. அதிலும் அதர்வா மற்றும் ரஷி கண்ணா காதல் காட்ச்சிகள் ஓவர் டோஸ். வழக்கமாக தமிழ் சினிமாவில் செய்யும் சில தவறுகளை இந்த படத்திலும் செய்துள்ளனர். குண்டடிபட்ட அதர்வா காயத்துடன் ஸ்டண்ட் செய்வது, வில்லன் நடிகர் லாஜிக் இல்லாமல் செய்யும் சில செயல்கள் போன்றவை படத்தின் பல்ப்

படத்தை பற்றி இறுதி அலசல்:

ஒரு திரில்லர் படத்தை சில மசாலாக்களை தூவி நமக்கு விருந்தளித்திருக்கிறார் இயக்குனர். படத்தின் நீளத்தை தவிர வேறு எதுவும் பெரிதாக குறை சொல்ல முடியாது. ஒரு சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் இறுதியில் இது ஒரு நல்ல த்ரில்லர் படம் தான் என்ற எண்ணத்தை கொடுத்துள்ளது.