இமைக்கா நொடிகள் படத்தில் முதலில் இந்த மாஸ் ஹீரோதான் நடிக்க இருந்தாராம்.! வெளியான ரகசியம்

0
336

சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான “இமைக்க நொடிகள் ” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. அதர்வா, அனுரன் காஷ்யப் போன்றவர்களின் நடிப்பும் இதில் மிகவும் பாராட்டை பெற்றுவருகிறது.

Anurag Kashyap

படத்தில் உள்ள அணைத்து கலைஞர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக நடித்துக் கொடுத்துள்ளனர். அதிலும் இந்த படத்தில் வில்லன் நடிகராக நடித்துள்ள இந்தி நடிகர் அனுரன் காஷ்யப்பின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

கிட்டதட்ட மூன்று வருடங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் கதையை தயார் செய்திருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. கதையை முடித்த பின்னர் 2014 ஆம் ஆண்டு முதன் முதலில் இந்த படத்தின் கதையை மலையாள நடிகர் மம்முட்டியிடம் தான் கூறியுள்ளார்.

mammooty

இந்த கதையை கேட்ட மம்முட்டியும் இந்த படத்தில் நடித்து கொடுப்பதாக இயக்குனர் அஜய் ஞானமுத்துவிடம் கூறியுள்ளார். ஆனால்,சில பல காரணங்களால் இந்த படத்தில் நடிகர் மம்முட்டி நடிக்க முடியாமல் போய்யுள்ளது. அதன் பின்னரே இந்த கதையை கதாநாயகிக்கு ஏற்ற கதையாக மாற்றி பின்னர் நயன்தாராவை கமிட் செய்துள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.