விஸ்வாசம் படத்தில் இசையமைத்த இமானுக்கு சர்வதேச விருது.! செம மாஸ்.!

0
1295
Iman
- Advertisement -

அல்டிமெட் ஸ்டார் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்றுள்ளது. சத்ய ஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைத்துள்ள இமானுக்கு சர்வதேச அளவில் விருது கிடைத்துள்ளது.

-விளம்பரம்-

விஜய் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராகத் தனது 17ஆவது வயதில் அறிமுகமானார் இமான். பல  முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் படங்களுக்கு இமான் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

கும்கி துவங்கி சமீபத்தில் வெளியான விஸ்வாசம் படம் வரை இவர் இசையமைத்த அணைத்து பாடல்களும் ஹிட் என்று தான் கூற வேண்டும். அதிலும் விஸ்வாசம் படத்தில் வரும் ‘கண்ணானே கண்ணே’ பாடல் அனைவரையும் வசியம் செய்தது. விஸ்வாசம் படம் இமானின் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கனடாவில் உள்ள டொடரண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக ஒரு பாடலுக்கு  இமான் இசைமைத்திருந்தார். இதற்காக கனடாவில் உள்ள தமிழ் காங்கிரஸ் அவருக்கு மாற்றத்திற்கான தலைவர் விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement