தன் திருமணத்திற்கு வராத இரண்டு மகள்கள் குறித்து இமான் உருக்கம் – இரண்டாம் திருமணத்திற்கு பின் இமான் போட்ட முதல் பதிவு.

0
758
- Advertisement -

விஜய் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற தமிழன் படத்தின் மூலம் தான் இமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால், இதற்கு முன்பு இவர் 2000 ஆண்டு வெளிவந்த தில்ரூபா என்ற படத்திற்கு இசையமைத்திருக்கிறார். முதல் படத்திலேயே இவர் இசைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானது. இசையமைப்பாளர் இமான் மோனிகா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு இரண்டு மகள்களும் பிறந்தனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்து இருந்தார் இமான்.

-விளம்பரம்-

அதுவும் விவகாரத்து நடந்து ஓராண்டிற்கு பின் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டு இருந்தார். இது குறித்து இமான் கூறிய அவர், என்னுடைய நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் நான் ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கை ஒன்றை பல்வேறு பாதைகளை கொண்டது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம் .நானும் எனது மனைவி மோனிகா ரிச்சர்ட் அவர்களும் சட்டபூர்வமாக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம்.

இதையும் பாருங்க : பிக் பாஸில் பார்த்த சேரனின் தாயாரா இது ? இப்படி ஒரு பிராம்மாண்ட வீட்டில் வாழ்ந்து வருகிறாரா. வைரலாகும் வீடியோ இதோ.

- Advertisement -

இமானின் உருக்கமான பதிவு :

நாங்கள் இருவரும் இனிமேல் கணவன் மனைவி அல்ல. இது குறித்து எனது நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் எங்களது தனிப்பட்ட இந்த முடிவுக்கு மதிப்பளித்து எங்களது அடுத்தகட்ட வாழ்விற்கு செல்லும் மதிப்பளித்து ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று மிகவும் உருக்கத்துடன் பதிவிட்டு இருந்தார் இசையமைப்பாளர் இமான். இப்படி ஒரு நிலையில் இமான் இரண்டாம் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இரண்டாம் திருமணம் செய்த இமான் :

இமான் திருமணம் செய்துகொண்டுள்ள பெண் எமிலி என்றும், இவர் பிரபல கலை இயக்குனர் உபால்டுவின் மகள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. கலை இயக்குனர் உபால்ட் தமிழில் பல படங்களில் கலை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். 35 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கலை இயக்குனராக பணியாற்றிய இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு தனது 59வது வயதில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். அதில் ஒருவர் தான் எமிலி.

-விளம்பரம்-

மறுமனதில் இமான் போட்ட கண்டிஷன் :

ஏற்கனவே, இமான் தனது மறுமணம் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேசிய போது மறுமணம் குறித்து தான் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் தனக்கு வரும் மனைவி கண்டிப்பாக விதவை அல்லது விவாகரத்து பெற்றவராக இருக்க வேண்டும் என்றும், ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருக்க வேண்டும் என்றும், தன்னுடைய குழந்தைகளிடம் அன்புடன் இருப்பவராக இருக்க வேண்டும் என்றும்’ கூறி இருந்தார்.

இரண்டாம் திருமணம் குறித்து இமான் :

அவர் சொன்னதை போலவே ஒரு பெண் குழந்தைக்கு தாயான பெண்ணையே மறுமனம் முடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் தனது இரண்டாம் திருமணம் குறித்து பதிவிட்டுள்ள இமான் ‘எமலியின் மகள் நேத்ரா இனி தனது மூன்றாவது மகளாக இருப்பார் என்றும். என் திருமணத்தில் எனது இரண்டு மகள்களை மிஸ் செய்ததாகவும் அவர்கள் என்றாவது ஒருநாள் என் வீட்டிற்கு வருவார்கள் என்று காத்துகொண்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


Advertisement