-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

நான் காய்கறி விற்றவன் என்பது எத்தனை பேருக்கு தெரியும் – இமான் அண்ணாச்சி உருக்கம்

0
86

‘ஹே மிஸ் பண்ணாதீங்க! அப்றம் வருத்தப்படுவீங்க!’என்ற டயலாக் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் தன் பக்கம் பக்கம் எதிர்த்த இமான் அண்ணாச்சியின் வாழ்க்கை வரலாறு தான் இணையத்தில் வைரலாகியுள்ளது. இவர் தன்னுடைய நெல்லை தமிழ் பேச்சு மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாச்சி முதன் முதலில் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை’ என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதை கொள்ளை கொண்டார் இமான் அண்ணாச்சி.அதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவருக்கு, சினிமாவில் வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தது விக்ரமன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை காதல்’ படம் தான்.

சினிமா ஆசை :

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்த அண்ணாச்சி, எனக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் எரல் என்ற ஊர். சின்ன வயசிலிருந்து சினிமாவில் காமெடியனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. எல்லாரையும் நல்லா சிரிக்க வைக்கிறியே நீ ஏன் சினிமாவில் நடிக்க கூடாது என ஒருவர் கூற உடனே சென்னை கிளம்பி வந்துட்டேன்.

கையில் மஞ்சப்பையோடு அண்ணாச்சி :

-விளம்பரம்-

சென்னைக்கு வந்த உடனே எக்மோரில் பாரதிராஜா மற்றும் கஸ்தூரிராஜா ஆளுக்கு ஒரு வண்டியை வைத்து கொண்டு எனக்காக காத்திருப்பார்கள் என பார்த்தேன். ஆனால் கடைசியில் இரண்டு போர்ட்கள் தான் நின்றார்கள். பிறகு கையில் மஞ்ச பையோடு ஷேர் ஆட்டோ பிடித்து பனகல் பார்க் போனேன். அப்போது கையில் காசு இல்லாமல் இருக்கும் சினிமா கலைஞர்களுக்கு அதுதான் தங்கும் விடுதி என்றார் அண்ணாச்சி.அதன் பிறகு வேறு வழியில்லாமல் ஒரு மளிகை கடையில் வேலைக்கு சேர்ந்தேன். நான் சினிமாவில் நடித்த தான் சென்னை வந்திருக்கிறேன் என்று தெரிந்தவுடன் அங்கு என்னை வேலை விட்டு நிறுத்தி விட்டார்கள். அதன் பிறகு ஒரு கேமரா விற்கும் கடையில் வேலை செய்தேன் என்றார் .

-விளம்பரம்-

காய்கறி விற்றார் :

அதன் பிறகு அண்ணாச்சி , இப்படி ஆரம்பித்த என் வாழ்க்கை, என் அம்மாவிற்கு பணம் அனுப்ப வேண்டும் என்ற கட்டாயத்தால் 18 வருடம் காய்கறி வியாபாரம் ரோட்டில் ரோட்டில் செய்தேன். இதற்கிடையில் எனக்கு திருமணமும் நடந்தது. ஒண்ணுமே இல்லாத எனக்கு 2 திருமணம் செய்து கொடுத்தார்கள். அதன் பிறகு கஷ்டத்தில் வாழ்க்கையை ஓட்டுவதற்காக என் மனைவி நகைகளை ஒவ்வொன்றாக விற்றேன். ஆனால், இப்போது சினிமாவில் ஜெயித்த பிறகு அவருக்கு 100 பவுனாக திருப்பிக் கொடுத்து விட்டேன் என்றார் புன்னகையோடு.

முதல் வாய்ப்பு:

18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு டிவியில் வாய்ப்பு கிடைத்தது. சுத்தமாக தமிழ் பேச வேண்டும் என்று சொன்னார்கள். அங்கு ஆரம்பித்த கலைப்பயணம் தான் இது. அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு சீசன் 1 ல் பங்கு பெற்றேன். அதன் பின் விஜய் டிவியில் தொடர முடியவில்லை. வேறொரு தனியார் டிவியில் வாய்ப்பு கிடைத்தவுடன் அங்கு 100 சதவீதத்தை கொடுத்ததால் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது.

சன் டீவியில் அண்ணாச்சி :

தொடர்ந்து அண்ணாச்சி, உங்களுக்கு வாய்ப்பு ஒரு முறை தான் வரும், அதில் 100 சதவீதம் நிரூபித்தால் தான் ஒரு 20 சதவீதம் ரிட்டன் வரும். அதற்குப் பிறகுதான் சன் டிவியில் குழந்தைகள் வைத்து ‘குட்டிஸ் சுட்டீஸ்’ நிகழ்ச்சி தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது என்று கூறினார். பின்பு நண்பர் ஒருவர் கார் வாங்கிக்கொள், அப்பதான் நல்ல வாய்ப்புகள் வரும் என்றார். உடனே கார் மற்றும் செல்போனை வாங்கினேன். அதற்குப் பிறகுதான் நல்ல வாய்ப்புகள் தேடி வந்தன என்றார் இமான் அண்ணாச்சி.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news