தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக நடிகர் இமான் அண்ணாச்சி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சோசியல் மீடியா ஓபன் பண்ணினாலே பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதேபோல் ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி ஜூன் 1ஆம் தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 19 நடைபெற இருக்கிறது. மேலும், வாக்குகள் எண்ணிக்கை ஜூன் 4 நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, மற்றும் பாஜக கூட்டணி என்று கூட்டணி அணிகளும், நாம் தமிழர் கட்சி மற்றும் தனித்து நிற்கிறது. தற்போது அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் குறித்த வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. பிரபலங்கள் பலருமே தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள்.
இமான் அண்ணாச்சி பேட்டி:
அந்த வகையில் திமுக கட்சிக்கு ஆதரவாக நடிகர் இமான் அண்ணாச்சி பேட்டியில் இருக்கிறார். அதில் அவர், தற்போது தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக சூடு பிடித்துக் கொண்டு செல்கிறது. கணிப்பு படி திமுக கூட்டணி தான் வெல்லும். அண்ணாமலை நைட்டில் எழுதி வைத்ததை காலையில் ஒப்பிக்கிறார். அவர் பேசின பல விஷயங்கள் பொய் என்று திமுக கண்டுபிடித்து கூறி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று நாலு கோடி அண்ணாமலை இடமிருந்து எடுத்ததாக சொல்லப்பட்டது.
திமுக குறித்து சொன்னது:
இப்போது ஒரு முக்கியமான தகவலை சொல்கிறேன். கோவை நோக்கி 40 ஆயிரம் கோடி சென்று கொண்டிருக்கிறது. உடனே போய் பிடியுங்கள். அந்த வேலையை பாருங்கள். கண்டிப்பாக மோடியை விரட்டி அடித்து திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ் தான் ஆட்சியை பிடிக்கும். காங்கிரஸ் நமக்கு சித்தப்பா, பெரியப்பா மாதிரி. நமக்கு என்ன தேவை என்றாலும் உடனே செய்து தருவார்கள். கண்டிப்பாக இந்த முறை காங்கிரஸ் தான் வெற்றி பெறும் என்று பேசி இருக்கிறார்.
இமான் அண்ணாச்சி குறித்த தகவல்:
‘ஹே, மிஸ் பண்ணிடாதீங்க! அப்றம் வருத்தப்படுவீங்க!!’ என்ற டயலாக் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் தன் பக்கம் ஈர்த்தவர் இமான் அண்ணாச்சி. இவர் தன்னுடைய நெல்லை தமிழ் பேச்சு மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அண்ணாச்சி முதன் முதலில் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை’ என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தார். அதன் பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.
இமான் அண்ணாச்சி திரைப்பயணம்:
தனது வித்தியாசமான மொழி உச்சரிப்பினால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் இமான். அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவருக்கு முதன்முதலில் சினிமாவில் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது விக்ரமன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை காதல்’ படத்தில் தான். அதன் பின் இவர் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.