என் தலையில் நானே மண்ணை அள்ளி போட்டுகிட்டேன் – புலம்பும் பப்ளி நடிகை

0
2899
manju

சின்னத்திரை நட்சத்திரமாக மலையாள படத்தில் அறிமுகம் ஆனவர் மஞ்சிமா மோகன். அதன்பின்னர் மலையாளத்தில் செம்ம ஹிட்டான, ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம்.ஹீரோயினாக மாறினார்.

Manjima Mohan

அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழிலும் ஹீரோயினாக கால் பதித்தார். ஆனால் அதன் பின்னர் அவர் செய்தது எல்லாம் அவருக்கு வினையாகவே போய் முடிந்தது.

அடுத்தடுத்து அவர் நடித்த அனைத்து படங்களும் பிளாப் ஆகிப் போனது. அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற மஞ்சிமா அதற்குமேல் சரியான தொலைநோக்கு பார்வை இல்லாமல் தவித்தார்.

நடிகர் திலக வாரிசு நடிகருடன் நடித்தால் ஹீரோயினின் சினிமா வாழ்க்கையே முடிந்து விடும் என்ற பேச்சு இருக்கிறது. அதனையும் மீறி அந்த படத்தில் அடித்து பிளாப் ஆனது.

Manjima Mohan

மேலும், அரசியல் வாரிசு நடிகருடன் நடிக்க வேண்டாம் என தோழிகள் பல முறை கூறியும் கூட கேட்காமல் அவருடன் ஒரு படம் நடித்து அதுவும் பிளாப் ஆனது. தற்போது எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல், என் தோழிகள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல்… என் தலையில் நானே மண்ணை அள்ளி போட்டுகிட்டேன்…என சோகமாக உட்கார்திருக்கிறாராம் மஞ்சிமா.