இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் போது மொயின் அலியிடம் வலிமை அப்டேட்டை கேட்ட அஜித் ரசிகர்கள். வைரல் வீடியோ.

0
1601
valimai
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள்..இப்படி ஒரு நிலையில் வலிமை படத்தின் அப்டேட் தாமதவாமதால் கடுப்பான அஜித் ரசிகர்கள் மதுரையில் வலிமை அப்டேட் காணவில்லை என்று போஸ்டர் கூட அடித்தனர்.

-விளம்பரம்-

இதை தொடர்ந்து ‘வலிமை’ பட அப்டேட் குறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அஜித்தும் போனி கபூரும் இணைந்து ‘வலிமை’ படத்தின் அப்டேட் குறித்து முடிவெடுப்பார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும், அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும் என்று குறிப்பிட்டு இருந்தார்.இதனை தொடர்ந்து சமீபத்தில் வலிமை படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி 15 ஆம் தேதி நிறைவடைகிறது எனவும், ஓரிரு காட்சிகள் மட்டும் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் போனி கபூர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : முதல் மரியாதை படத்தில் நடித்த எம்.ஜி.ஆரின் மருமகன் – 35 ஆண்டுகளுக்கு பின் அவர் நடித்துள்ள படம் இதோ.

- Advertisement -

ஆனால் படம் ரிலீஸ் பற்றி படக்குழுவினர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.மேலும் வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.சமீபத்தில் யுவன் வலிமை படத்தில் ஓப்பனிங் பாடலுக்கு விக்னேஷ் சிவன் பாடல் வரிகளை எழுதியுள்ளார் எனக் கூறியிருந்தார். அதே போல வலிமை படத்தின் ஓப்பனிங் சாங் பாடல் படப்பிடிப்பு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

இப்படி ஒரு நிலையில் இந்தியா மற்றும் இங்காலத்து அணிக்கு இடையிலான டெஸ்ட் பேட்டியில் பீல்டிங் செய்து கொண்டு இருந்த இங்கிலாந்து அணி வீரர் மெயின் அலியிடம் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டை கேட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் மிழக முதலமைச்சர் பிரச்சாரத்திற்கு சென்று கொண்டு இருந்த போது, மக்கள் கூட்டத்தில் இருந்த சிலர் தலைவா ஈஸ்வரன் எப்போ வரும், வலிமை அப்டேட் எப்போ வரும் என்று கேட்டனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது என்பது குறிப்படத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement