லோகேஷ் கனகராஜ் யுனிவர்சில் இணைந்த புது இசையமைப்பாளர் சாய் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருந்த கட்சி சேர, ஆசை கூட பாடல்களின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் சாய் அபயங்கர். ‘ஜென் சி’ என்ற மோடில் அமைந்த இந்த பாடல்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. இதன் மூலம் தான் தற்போது இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் பென்ஸ் என்ற திரைப்படத்தில் சாய் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஹரோவாக நடிக்கிறார். அது மட்டுமில்லாமல் இந்த படம் லோகேஷன் எல்.சி.யுல் வரும் என்று ஏற்கனவே அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தார்கள். இதற்கு முன்பு லோகேஷின் படங்களுக்கு அனிருத், சாம் சி எஸ் தான் இசையமைத்திருந்தார்கள். ஆனால், இப்போது லோகேஷின் யுனிவர்சில் புது இசையமைப்பாளராக சாய் என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.
சாய் அபயங்கர் பேட்டி:
இந்த நிலையில் இது தொடர்பாக சாய் அளித்த பேட்டியில், இந்த வாய்ப்புக்கு முதலில் நான் என்னுடைய வழிகாட்டியான சந்தோஷ் குமார், மகேஷ் ராஜேந்திரன், என்னுடைய தந்தை திப்பு ஆகியோருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். என்னுடைய இந்த இசை பயணத்தில் இவர்கள் தான் என்னை வழிநடத்தி கூட்டிட்டு போனார்கள். இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு முக்கிய காரணமும் இவர்கள் தான். எனக்கு எப்போதுமே கதைகள் கேட்பது ரொம்ப பிடிக்கும். அப்படித்தான் ஒரு நாள் எனக்கு சந்தோஷ் கால் பண்ணி ஒரு நல்ல கதை இருக்கு.
சினிமா வாய்ப்பு:
உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று சொல்லி அழைத்தார். நானும் கதை கேட்க போனேன். அப்போது அங்கு இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் சார் இருந்தார். அவருடைய ரெமோ, சுல்தான் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய படம் என்று தெரிந்ததால் நான் கதை கேட்காமலேயே மியூசிக் போட்டிருப்பேன். அதற்குப் பிறகு பாக்யராஜ் சாரும் கதை சொன்னார். கதை சொல்லும் போது யுனிவர்ஸ் கனெக்ட் பற்றி சொன்னதும் ஆச்சரியமாகிவிட்டேன். உடனே இந்த படத்தை நான் கண்டிப்பாக செய்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். அப்படித்தான் பென்ஸ் படத்துக்குள் நான் வந்தேன்.
லோகேஷ் குறித்து சொன்னது:
இந்த வாய்ப்பு எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இந்த யுனிவர்சில் வந்த மியூசிக் பற்றி அதிக அளவில் பேசப்பட்டிருக்கு. என்னை நம்பி இந்த பொறுப்பை கொடுத்த என்னுடைய தயாரிப்பாளர்கள் சுதன், லோகேஷ் கனகராஜ் அண்ணா, ஜெகதீஷ் பழனிசாமி அண்ணா ஆகியோருக்கு தான் நன்றி சொல்லணும். படத்தின் பின்னணி இசை, பாடல்கள் வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இரண்டுமே ரொம்ப நல்லா வந்து கொண்டிருக்கிறது கமர்சியல். பென்ஸ் படத்தினுடைய மோஷன் போஸ்டர் சமீபத்தில் தான் வந்தது. அந்த மோஷன் போஸ்டருக்கு மியூசிக் நான் தான் போட்டேன்.
படத்தின் பாடல்கள்:
இயக்குனரும் தயாரிப்பாளர்களும் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பதால் என்னால் நம்பிக்கையோடு வேலை பார்க்க முடிகிறது. அதேபோல் பென்ஸ் படத்துடைய ஒரு பாடலை லோகேஷ் அண்ணா கேட்டு என்னை பாராட்டி இருந்தார். இயக்குனர் சாரமே பாடல்களை கேட்டு பாராட்டினார். ஒரு பெரிய படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாவது ரொம்ப சந்தோஷம். என்னுடைய ஆசை கூட பாடல் வெளியான போது தான் பென்ஸ் திரைப்படத்தில் நான் கமிட்டானேன். நடிகர் விஜய் சாருக்கும் ஆசை கூட பாடல் பிடித்திருந்தது என்று அட்லீ அண்ணா சொன்னார் என்று கூறி இருக்கிறார்.