ஷாக்கிங் நியூஸ் : இந்தியன் 2 படப்பிடில் ஏற்பட்ட விபத்தில் மருமகனை இழந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன்.

0
4965
indian-2
- Advertisement -

உலகநாயகன் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் நேற்று(பிப்ரவரி 19) இரவு கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலகநாயகன் கமல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் என்று பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள பூந்தமல்லியில் நடைபெற்று வருகிறது. இதற்காக நசரத்பேட்டையிலுள்ள  இ வி பி பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தது.

-விளம்பரம்-
Image

- Advertisement -

நேற்றைய படப்பிடிப்பில் நடிகர் கமலும் கலந்துகொண்டார், நேற்று இரவு, படப்பிடிப்பின்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது. இந்த கிரேன் மானிட்டர் எனும் படப்பிடிப்புக் காட்சிகளைப் பார்க்கும் கூடாரம் மீது விழுந்தது. அந்தப் பகுதியில்தான் இயக்குநர் ஷங்கர், உதவி இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும் இருந்தனர். இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, உதவி கலை இயக்குநர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது என மூன்று பேர் பலியாகியுள்ளனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.

இதையும் பாருங்க : சட்டை பட்டனை கழட்டி சில்லுகருப்பட்டி பட நடிகை கொடுத்த போஸ்.

-விளம்பரம்-

இந்த 8 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று விபத்தில் சிக்கி உயிரிழந்த 3 நபர்களில் கிருஷ்ணா என்பவர் பிரபல கார்ட்டூனிஸ்ட்டான மதன் அவர்களின் மருமகன் என்பது தெரியவந்துள்ளது. மதனின் மருமகனான கிருஷ்ணா இந்தியன் 2 படத்தில் இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். மேலும், கிருஷ்ணா மதன் இளையமகள் அமிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு விளம்பர படங்களையும் கார்ப்பரேட் படங்களையும் எடுத்துள்ளனர். இந்த நிலையில் மதன் அவர்களின் மருமகன் கிருஷ்ணா இறப்பு குறித்து பிரபல நடன இயக்குனரான காயத்ரி ரகுராம் ட்வீட் செய்துள்ளார். அதில் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஸ்ரீகிருஷ்ணா நீயும் இருந்தது இப்போதுதான் எனக்கு தெரிய வந்துள்ளது என்னுடைய மனம் மிகவும் நொறுங்கி விட்டது,மேலும் கிருஷ்ணாவை தனக்கு ஏற்கனவே தெரியும் என்றும், இவர் ஏற்கனவே ஏ எல் விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் என்றும், அதுபோக இவர் தனது தோழியின் கணவர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisement