இந்தியன் 2 விபத்து : உயிரிழந்தோர் 3 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி. யார் யார் கொடுத்தது தெரியுமா ?

0
807
indian
- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இந்தியன் 2 திரைப்படம் பெரும் பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்று வந்தது . படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிக்காக நாசரேத் பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்துவந்தது .

-விளம்பரம்-

இந்த படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் அநியாயமாக உயிரிழந்து இருந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி புதன் கிழமை இரவு இந்தியன் 2 செட்டில் ஏற்பட்ட அந்த கோர சம்பவத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, உதவி கலை இயக்குநர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது என மூன்று பேர் பலியாகியுள்ளனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.

- Advertisement -

இதில் சம்பவ இடத்தில் இருவர் உயிரிழக்க, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்தில் உயிரிழந்த கிருஷ்ணா, பிரபல கார்டூனிஸ்ட்டான மதனின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தோரின் நிவரான நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியன் 2 விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு லைகா நிறுவனம் 2 கோடி ரூபாய், கமல் 1 கோடி ரூபாய் மற்றும் இயக்குநர் ஷங்கர் 1 கோடி ரூபாய் நிவாரணத் தொகையாக அறிவித்தார்கள். ஆனால், யாருக்குமே பணம் கொடுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 6) அம தேதி வழங்கப்பட்டது. இதுகுறித்து கமல்ஹாசன் கூறியதாவது, வரும் முன் காப்பது அவசியம், இனி இதுபோன்று நிகழாமல் இருக்க பேசிக்கொண்டு இருக்கிறோம். மேலும் கொரோனா காலம் என்பதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement