இந்திய விமானப்படையில் தந்தையும், மகளும் இணைந்து போர் விமானத்தை இயக்கி புதிய வரலாறு படைத்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கேட்ட கேள்விக்கு இந்திய நாட்டில் பெண்கள் பல துறையில் சாதித்து வருகிறார்கள். ஆண்களுக்கு நிகராக பெண்கள் படித்து முன்னேறுவது மட்டுமில்லாமல் நாட்டை பாதுகாக்கும் துறையிலும் இருக்கிறார்கள்.

சமைப்பது மட்டும் தான் பெண்களுடைய வேலை என்ற எண்ணத்தை நீக்கி பல துறைகளில் பெண்கள் சாதித்தும் வருகிறார்கள். அந்த வகையில் ஓட்டுனர் முதல் நாட்டை பாதுகாக்கும் ஆயுதப் படைகள், ராணுவம் என பல துறைகளில் சேர்ந்து நாட்டையும் நம்மையும் பாதுகாத்து வருகிறார்கள் பெண்கள். ஆணும் பெண்ணும் நிகரென என்ற பாரதியின் கனவை இந்திய நாடு நனவாக்கி இருக்கிறது.

Advertisement

இதையும் பாருங்க : எனக்கு போனில் கூட விஜய் வாழ்த்துசொல்லவில்லை அதற்கு காரணம் இதான் – மனம் கலங்கிய விஜய்யின் தந்தை.

அந்த வகையில் தற்போது ஒரு தந்தையும், மகளும் சேர்ந்து போர் விமானத்தை இயக்கி இருக்கும் வரலாறு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் போர் விமானியாக ஏர் கமடோர் சஞ்சய் சர்மா இருக்கிறார். இவருடைய மகள் பிளையிங் அதிகாரி அனன்யா ஷர்மா ஆவார். இவர்கள் இருவருமே விமானப்படையில் அதிகாரிகளாக இருக்கிறார்கள்.

Advertisement

அனன்யா ஷர்மா கர்நாடகத்தில் பிடார் இந்திய விமானப்படை நிலையத்தில் பயிற்சி பெற்றார். இந்த வீராங்கனை சின்ன சிறு வயதிலேயே தன்னுடைய தந்தையை கவனித்து வந்தவர். இவர் தனது தந்தை சக விமானிகளுடன் இருப்பதை பார்த்து தானும் விமானி ஆக வேண்டும் என்று கனவோடு வளர்ந்திருக்கிறார். இதனால் அவர் விமான படையில் சேர்த்து அதிகாரி ஆவதை தவிர வேறு தொழிலை அல்லது வேலையை கற்பனை செய்துகூட பார்த்ததில்லை.

Advertisement

மேலும், இவர் இளம் வயதில் இருந்தே இவர் விமானப்படை அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவோடு தன்னை செதுக்கி இருக்கிறார். அதை தற்போது நனவாக மாற்றிக் காட்டியிருக்கிறார். அனன்யா ஷர்மா மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் பிடெக் பட்டம் பெற்றவர். இந்த வீராங்கனை 2016 ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் சேர்ந்தார். கடந்த டிசம்பரில் போர் விமானியாக மாறினார்.

தற்போது இவர் தன் தந்தையுடன் விமானத்தில் பறந்து சாதனை புரிந்து புது வரலாறு படைத்திருக்கிறார். இந்தியாவின் இந்த மகள் விமான படையில் இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தேசமும் வாழ்த்து தெரிவித்து வருகிறது. தற்போது போர் விமானத்தை இயக்கிய தந்தை, மகள் புகைப்படம் சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது.

Advertisement