எனக்கு போனில் கூட விஜய் வாழ்த்துசொல்லவில்லை அதற்கு காரணம் இதான் – மனம் கலங்கிய விஜய்யின் தந்தை.

0
656
SAC
- Advertisement -

என் பிறந்த நாளுக்கு விஜய் வராததற்க்கான காரணம் இதுதான் என்று எஸ் ஏ சந்திரசேகர் மனம் திறந்து கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக கொடிகட்டி பறந்தவர் எஸ் ஏ சந்திரசேகர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். 1981 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தில் தான் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப் படங்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இவர் 40 வருடங்களுக்கு மேலாக சினிமா திரை உலகில் பணியாற்றி வருகிறார். கடைசியாக இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்கிய 70 வது திரைப்படம் “கேப்மாரி”. இந்த படத்தில் ஜெய், அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யா, விபின் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : நடிகருடன் ஒரே அறையில் தங்கி இருந்த வீட்ல விசேஷம் பட நடிகை, செருப்பால் அடித்த முன்னாள் மனைவி. வீடியோ வைரலானதால் பறிபோன வாய்ப்புகள்.

எஸ் ஏ சந்திரசேகர் குறித்த தகவல்:

இந்த படம் இன்றைய இளைஞர்கள் செய்யும் அட்டூழியங்களையும், போடும் ஆட்டங்களையும் வெட்ட வெளிச்சமாக சுட்டிக்காட்டி, அதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவான கதை. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை கிடைக்கவில்லை. அதற்கு பிறகு இவர் எந்த படத்தையும் இயக்க வில்லை. பின் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ என்ற யூடியூப் சேனலை தொடங்கி இருக்கிறார். அதில் அவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும், சினிமா பயணத்தையும் பற்றி பதிவு செய்து வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

எஸ்.ஏ சந்திரசேகர் பிறந்தநாள்:

அதோடு தற்போது சினிமா உலகில் முடிசூடா மன்னனாக கலக்கிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யை உருவாக்கியதும் எஸ் ஏ சந்திரசேகர் தான். இந்நிலையில் சமீபத்தில் எஸ்.ஏ சந்திரசேகர் அவர்கள் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து தன்னுடைய பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். ஆனால், அவருடைய மகன், மருமகள், பேரப்பிள்ளைகள் யாருமே இல்லை. அதுமட்டுமில்லாமல் நடிகர் விஜய்க்கும், அவருடைய தந்தைக்கும் சில காலமாகவே பேச்சுவார்த்தை இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது. நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தில் மாவட்ட தலைவர்களை நியமிப்பது, ரசிகர் மன்றத்தை கட்சியாக மாற்றுவது போன்ற பல விஷயங்களில் விஜய்க்கும் அவருடைய தந்தைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

எஸ்.ஏ சந்திரசேகர்- விஜய் இடையே பிரச்சனை:

அதிலிருந்து விஜய் தன்னுடைய தந்தையிடம் பேசுவதில்லை என்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. அதற்கேற்ற போல் தற்போது தன் தந்தையின் பிறந்தநாளுக்கு விஜய் வராதது குறித்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். விஜய் ரசிகர்கள் கூட இப்படி எல்லாம் விஜய் செய்திருக்க கூடாது என்றும் அறிவுரை கூறியிருந்தார்கள். பிறந்தநாளுக்கு அடுத்த நாள் சந்திரசேகர் தன்னுடைய மனைவியுடன் திருக்கடையூர் சென்று யாகங்கள் செய்து விஜய்க்காக வேண்டிக் கொண்டதாக தகவல்கள் எல்லாம் வெளியாகிறது.
இந்த நிலையில் தன்னுடைய பிறந்தநாளுக்கு விஜய் வராதது குறித்து எஸ் ஏ சந்திரசேகர் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

பிறந்தநாளுக்கு விஜய் வராத காரணம்:

அதில் அவர் கூறியிருப்பது, விஜய்க்கு ஜூலை 2ம் தேதி ஹைதராபாத்தில் சூட்டிங் இருந்தது. அதனால் ஜூலை 1ஆம் தேதியே அவர் ஹைதராபாத் சென்று விட்டார். அதனால் தான் அவரால் பிறந்தநாளுக்கு வர முடியவில்லை. மேலும், எனக்கு வாழ்த்து சொல்ல வந்தவர்களில் பலர் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்கள். ஆனாலும் என்னை அப்பாவாக நினைப்பதாலும், விஜய் என்னும் மந்திரத்தை தவிர ஒண்ணும் அறியாதவர்கள் என்னை சந்திக்க வந்திருந்தார்கள். விஜய் மக்கள் இயக்கம் வலுவிழந்து விட்டது. விஜய் மக்கள் இயக்கத்தில் நீக்கப்பட்ட பலரை மீண்டும் இயக்கத்தில் சேர்க்க தான் பாடுபட்டு வருகிறேன் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement