- Advertisement -
கிரிக்கெட் விளையாட்டையும் நட்பையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘சென்னை-28’ படத்தின் முதல் பாகமும், இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
-விளம்பரம்-
சமீபத்தில் இந்த படத்தை பார்த்த இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் அஷ்வின், “ ‘சென்னை-28’ படத்தின் இரண்டாம் பாகம் ரொம்ப நன்றாக இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையை திரும்பி பார்க்க வைத்துவிட்டது. என்னால் முடிந்திருந்தால் இந்த படத்தில் நானும் ஒரு பங்கு வகித்திருப்பேன்” என்று அவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
அதற்கு இயக்குநர் வெங்கட் பிரபு, “நன்றி ப்ரோ. உங்களை ‘சென்னை-28’ இரண்டாம் பாகத்தில் மிஸ் பண்ணிட்டேன். கண்டிப்பாக மூன்றாம் பாகத்தில் உங்களை நடிக்க வைக்கிறேன்” என்று பதில் ட்வீட் செய்துள்ளார்.
- Advertisement -
Advertisement