மீண்டும் லொள்ளு சபாவை ஒளிபரப்புங்க. கோரிக்கை வைத்த இந்திய கிரிக்கெட் வீரர்.

0
20407
aswin

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சூப்பர்ஸ்டார் முதல் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று பாரபட்சம் பார்க்காமல் பாடங்களை தாறுமாறாக கிண்டல் செய்து இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பி வந்தார்கள் மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு நடிகர் நடிகர்கள் தற்போது சினிமாவிலும் கலக்கி வருகிறார்கள் சந்தானம் சுவாமிநாதன் பாஸ்கர் என்று பல்வேறு நடிகர்கள் லொள்ளு சபா நிகழ்ச்சியில் இருந்து வந்தவர்கள்தான்.

மேலும் லோல்லு சபா வீடியோக்கள் தற்போது யூடியூபில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் லொள்ளு சபா நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் என்று கேட்டுள்ளார். ஒட்டுமொத்த உலகையும் அச்சத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது இந்த கொரோனா வைரஸ். நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்

- Advertisement -

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் யாரும் வெளியில் வரக் கூடாது என்றும், பல முன்னெச்சரிக்கைகள் உடன் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள் இருப்பதால் தவித்து வருகின்றனர்.வீட்டில் இருப்பதால் போர் அடிக்காமல் இருப்பதற்காக ஒவ்வொரு சேனலும் சீரியல்,நிகழ்ச்சிகள் என மீண்டும் தூசு தட்டி மறு ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.

இந்தியாவே ஒட்டுமொத்தமாக லாக் டவுனில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு டிவி சேனல்களும் தூசுதட்டி தங்களுடைய பழைய சீரியல்களை மறுஒளிபரப்பு செய்து வருகிறார்கள். ராமாயணம், மகாபாரதம் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்று சொன்னவுடன் மக்கள் அனைவரும் குஷியாகி விட்டார்கள். மேலும், மக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும் அந்த நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் ட்விட்டர் ரசிகர் ஒருவர், தற்போது ஊரடங்காள் நிலவும் இக்கட்டான சுழலில் விஜய் டிவிக்கு வேண்டுகோள் வைக்கிறேன். தயவு செய்து தமிழக மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட லொள்ளு சபா நிகழ்ச்சியை மீண்டும் கொண்டு வாருங்கள் என்று பதிவிட்டிருந்தார். அந்த ட்வீட்ட்டிற்கு அஸ்வின், இதை நான் முழுவதும் ஒப்புக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அஸ்வின், பிரபல காமெடி நடிகர் கௌண்டமணியின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கவுண்டமணியின் கவுண்டர் எல்லாம் அஸ்வினுக்கு அத்துபடி.

Advertisement