தல’னா அஜித் மட்டும் தான்..! தோனி எல்லாம் தலையே கிடையாது.! இந்திய கிரிக்கெட் வீரர் அதிரடி

0
754
Dhoni

சமீப காலமாக சினிமாவில் தல என்றால் நடிகர் அஜித், கிரிக்கெட் தல என்றால் தோனி என்று அனைவரும் குறிப்பிட்டு வருகின்றனர். மேலும் தோனியை தல என்று குறிப்பிட்டு பல்வேறு பதிவுகளும் வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் அஜித் மட்டும் தான் தல என்று பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் குறிப்பிட்டுள்ளார்.

sreesanth

நடிகர் அஜித்திற்கு தமிழ் நாட்டில் மட்டும் கிடையாது அண்டை மாநிலமான கேரளவியிலும் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். அதனை நிரூபிக்கும் வகையில் தற்போது கேரளாவை செத்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீஷாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் , இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இவர், இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சாளராக இருந்து வந்தார். பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்னர் கிரிக்கெட் சூதாட்டத்தில் மாட்டிக்கொண்டு கிரிக்கெட் விளையாட்டுகளில் இருந்து தடை செய்யப்பட்டார்.

MS-Dhoni

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடருக்கு பிறகு கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்ட ஸ்ரீஷாந்த் , சமீபத்தில் செல்ஃபி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது ” எல்லோரும் தோனியை தல என்று அழைக்கிறார்கள் .ஆனால், என்னை பொறுத்தவரை தல என்றால் அது நடிகர் அஜித் குமார் மட்டும் தான், அது அனைவருக்குமே தெரியும் ,மேலும் நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். “என்று கூறியுள்ளார்.