தந்தையின் மதுப்பழக்கம், ஓப்பனாக பேசிய ரோபோவின் மகள் – மற்றவர்களுக்கு கொடுத்த அட்வைஸ்.

0
2244
Roboshankar
- Advertisement -

தனது தந்தையின் மதுப்பழக்கம் குறித்து ரோபோ ஷங்கர் மகள் பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே ரோபோ ஷங்கர் குறித்து அதிகம் பேசப்பட்டு வந்தது அவரது உடல் நலம் பற்றி தான். பாடி பெல்ட்டிங் செய்து படு கட்டுமஸ்தான உடலுடன் இருந்த ரோபோ ஷங்கர் சமீப காலமாக உடல் எடை குறைந்து வருகிறார். ரோபோ ஷங்கர் இளைத்து இருப்பதை பார்த்து பலரும் என்ன ஆனது ஏதாவது சுகரா இல்ல சரக்கா என்று கேலி செய்து வந்தனர். மேலும், ரோபோ ஷங்கர் உடல் நிலை குறித்து அவரது குடும்பத்தினர் விளக்கம் கொடுத்தனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரோபோ ஷங்கர் ‘ ‘தனக்கு உடலில் பிரச்சனை இருப்பது உண்மைதான் அனைவருக்கும் வருவது போல நோய் வந்தது எனக்கு இடையில் மஞ்சள் காமாலை வந்து இருந்தது அப்போது நான் உடல் எடையை குறைக்க டயட் இருந்தேன் அந்த சமயத்தில் மஞ்சள் காமாலை வந்ததால் என்னுடைய உடல் எப்படி மெலிந்து போனது ஆனால் அதற்குள் என்னைப் பற்றி என்னென்னவோ எழுதி விட்டார்கள் நான் இறந்து விட்டதாகவும் என்னுடைய உடல் வீட்டிற்கு வந்து விட்டதாகவும் கூட எழுதினார்கள்’ என்று கூறி இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தனது தந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது- கடந்த சில மாதங்களாகவே எனது அப்பா மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார்.இதனால் அவருக்கு உடல்நிலை பாதிப்பு அதிகமாக ஏற்பட்டு விட்டது. இப்போது மதுப்பழக்கத்தில் இருந்து மீண்டு புதிய வாழ்க்கையை அப்பா வாழ்ந்து வருகிறார். இதுபோன்ற பழக்கங்களை இளம் தலைமுறையினர் தவிர்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க இந்திராஜாவிற்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இந்திரஜா ஷங்கர் திருமணம் செய்யப்போகும் கார்த்திக் ‘தொடர்வோம்’ என்கிற தன்னார்வல அறக்கட்டளையை நிறுவி பல குழந்தைகளை வளர்த்து வருகிறார். அவருடைய பூர்வீகம் மதுரைதான். ரோபோ சங்கரும் மதுரையைச் சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். இருவரும் உறவினர்கள் என்பதால் இது நிச்சயம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருக்கலாம் என்கிற கருத்தும் பரவி வருகிறது.

-விளம்பரம்-

கார்த்திக்கிற்கு இயக்குநர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசையாம். அதனால் இவரும் ஒரு வகையில் திரைத்துறையைச் சேர்ந்தவர்தான். இந்திரஜாவும் தொடர்ந்து நடிப்பிலும், படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கார்த்திக் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவிற்கு கீழே இந்திரஜா, கார்த்திக்கின் ரசிகர் ஒருவர் “நீங்க இந்திரஜாவைத் திருமணம் செய்யப் போறீங்களா?” எனக் கேட்திருந்தார்.

அதற்கு பதில் அளித்த கார்த்திக், “ஆமா… தேதி இன்னும் முடிவு பண்ணல. பண்ணதும் சொல்றோம்!” என்று பதில் சொல்ல, அதே பதிவில் இந்திரஜாவும், “இன்னும் தேதி முடிவு பண்ணல. அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வரும்! என்னுடைய சந்தோஷத்தை என் ரசிகர்களிடமும், நல விரும்பிகளிடமும் கண்டிப்பாக பகிர்ந்து கொள்வேன்!” என்று பதில் அளித்திருக்கின்றார். எனவே ரோபோ ஷங்கர் வீட்டில் விரைவில் டும் டும் டும் சத்தத்தை எதிர்பார்க்கலாம்.

Advertisement