திடீரென Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து விலகிய இந்திரஜா-கார்த்திக், காரணம் இது தான்

0
379
- Advertisement -

திடீரென Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து இந்திரஜா-கார்த்திக் ஜோடி விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். இவர் குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சாலும் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். முதலில் இவர் சின்னத்திரை நிகழ்ச்சியில் தான் பங்கேற்றார்.

-விளம்பரம்-

அதன் பின் தான் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி ரோலில் நடித்து இருக்கிறார். இதனிடையே நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒரு மகள் தான் இந்திரஜா. இவர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘பிகில்’ படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

- Advertisement -

ரோபோ ஷங்கர் மகள்:

முதல் படத்திலேயே இவருடைய நடிப்பை பார்த்து பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். அதற்குப் பின் இவர் ஜீ தமிழில் அர்ஜுன் தொகுத்து வழங்கியிருந்த சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருந்தார். ஆனால், இவரால் இறுதிவரை தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதனை தொடர்ந்து இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த ‘விருமன்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் சில படங்களில் கமிட்டாகி நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்திரஜா-கார்த்திக் திருமணம்:

மேலும், கடந்த சில மாதத்துக்கு முன் இவருக்கு கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கார்த்திக் மதுரையில் ‘தொடர்வோம்’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்போது இவர் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் ரோபோ சங்கரின் உறவினர் ஆவார். அதோடு இந்திரஜா- கார்த்திக் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து இருந்தார்கள். திருமணத்திற்கு பின் இந்திரஜா- கார்த்திக் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலக்கிக் கொண்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

இந்திரஜா- கார்த்திக் சொன்ன குட் நியூஸ்:

அப்போது நிகழ்ச்சியில் நடுவர் ராதா, எப்போது எங்களுக்கு மகிழ்ச்சி செய்தியை சொல்லப் போகிறீர்கள்? என்று கேட்டிருக்கிறார். அதற்கு இந்திரஜா கணவர் கார்த்திக், நாங்கள் இருவருமே அப்பா -அம்மா ஆகப் போகிறோம். இந்திரஜா கர்ப்பமாக இருக்கிறார் என்று சந்தோஷமான செய்தியை சொல்லி இருந்தார். பின் நிகழ்ச்சிக்கு இந்திரஜாவின் தந்தை ரோபோ சங்கர் வந்து தன்னுடைய மகள் கர்ப்பமாக இருப்பதை பகிர்ந்திருந்தார்.

நிகழ்ச்சியை விட்டு விலக காரணம்:

குறிப்பாக அவர், நான் தான் இங்கு இருப்பதிலேயே ரொம்ப யங் தாத்தா என்று சந்தோஷத்தில் கூறியிருந்தார். பின் நிகழ்ச்சியில் இவர்கள் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தவுடன் சின்னதாக சடங்கும் நடத்தி இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் கர்ப்பமாக இருப்பதால் இந்திரஜா-கார்த்திக் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக கூறி தாங்கள் வென்ற சாவியை நாஞ்சில் விஜயன்- மரியா தம்பதிக்கு கொடுத்து விட்டார்கள். இந்திரஜா கர்ப்பமாக இருப்பது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் இவர் நிகழ்ச்சியை விட்டு விலகியது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்து இருக்கிறது.

Advertisement