ஒரு பெரிய இயக்குனரின் மகள்னு கொஞ்சம் கூட காட்டிக்கள அக்கா நீங்க – விருமன் படத்தில் அதிதியுடன் நடித்தது குறித்து பிகில் பட நடிகை.

0
682
Indraja
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்ட இயக்குனர் என கொண்டாடப்படுபவர் சங்கர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. இவருடைய இளைய மகளான அதிதி தற்போது தமிழ் சினிமா உலகில் இளம் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார். தற்போது இவர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. அதனைத் தொடர்ந்து இவர் கொம்பன், மருது, தேவராட்டம், புலிகுத்தி பாண்டி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-
May be an image of 2 people, people standing and outdoors

பெரும்பாலும் இவர் இயக்கிய படங்கள் எல்லாம் கிராமத்து பாணியில் இருக்கும். அதே போல் விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அதிதி நடிக்கிறார். மேலும், கடந்த சில மாதங்களாகவே மதுரை, தேனி பகுதிகளில் தொடர்ச்சியாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

விருமன் படத்தில் அதிதி சங்கர்:

அது மட்டுமில்லாமல் இன்னும் சில மாதங்களில் விருமன் படம் திரைக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள இந்திரஜா அவர்கள் விருமன் படப்பிடிப்பு குறித்தும், அதிதி குறித்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

Indraja sankar first official statement after survivor tamil elimination |  Galatta

விருமன் படத்தில் இந்திரஜா:

அதில் அவர் அதிதியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அதில் இந்திரஜா கூறியது, உண்மையான நண்பர்கள் எப்போதும் ஆத்மார்த்தமாக ஒன்றாக இருப்பார்கள். அதிதி அக்கா, இந்த வாக்கியம் சொல்வது போல நாம் இருவருக்கும் ஒரே விதமான ஆத்மா தான். விருமன் படத்தில் நான் சந்தித்த மிகவும் அற்புதமான நபர். வேறு ஒரு அம்மாவிடம் இருந்து கிடைத்த அக்கா. படப்பிடிப்பில் நடந்த அனைத்து மகிழ்ச்சிகளையும் மற்றும் ஜோக்குகளையும் மிஸ் செய்கிறேன்.

-விளம்பரம்-

இந்திரஜா பதிவிட்ட போஸ்ட்:

நீங்கள் ஒரு மிகப் பெரிய இயக்குனரின் மகள் என்பதை கொஞ்சம் கூட காட்டிக்கொள்ளவில்லை. என்னிடமும் அனைவரிடமும் சகஜமாக பழகினீர்கள். உங்களிடம் இருந்த போது நான் மிகவும் சவுகரியமாக உணர்ந்தேன். நீங்கள் வாழ்வில் மேலும் மேலும் வெற்றியடைய வாழ்த்துகிறேன். லவ் யூ தேனு என்று பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்க உள்ள கொரானா குமார் என்ற படத்தில் அதிதிசங்கர் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

ரோபோ சங்கர் மகள் இந்திரஜா:

இந்த படத்தை இயக்குநர் கோகுல் இயக்குகிறார். இந்தப் படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமே தயாரிக்கிறது. இதே நிறுவனம் தான் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். மேலும், வேல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ‘வேல்ஸ்’ பல்கலைக்கழகம் தான் சமீபத்தில் சிம்புவிற்கு டாக்டர் பட்டமும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement