‘என் வீட்டு குலவிளக்கு, வம்சத்தை வளர்க்க வந்த தேவதை’- வளைகாப்பில் எமோஷனலான இந்திரஜா மாமியார்

0
170
- Advertisement -

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் வளைகாப்பிற்கு பிறகு அவரின் மாமியார் நெகிழ்ந்து பேசியிருக்கும் விஷயம் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். இவர் குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலமும் தமிழ் சினிமாவில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். முதலில் இவர் சின்னத்திரை நிகழ்ச்சியில் தான் பங்கேற்றார்.

-விளம்பரம்-

அதன் பின் தான் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின் இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி ரோலில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இதனிடையே 2002 ஆம் ஆண்டு நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒரு மகள் இந்திரஜா.

- Advertisement -

ரோபோ ஷங்கர் மகள்:

இவர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘பிகில்’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகஅறியப்பட்டார் என்று சொல்லலாம். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பை பார்த்து பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். அதற்குப் பின் இவர் ஜீ தமிழில் அர்ஜுன் தொகுத்து வழங்கியிருந்த சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருந்தார். ஆனால், இவரால் இறுதிவரை தாக்குப் பிடிக்க முடியவில்லை.

இந்திரஜா- கார்த்திக் திருமணம் :

அதனை தொடர்ந்து இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த ‘விருமன்’ படத்தில் நடித்திருந்தார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருப்பவர். இதற்கிடையே, இந்திரஜா தனது முறை மாமா கார்த்திக்கை திருமணம் செய்ய இருப்பதாக கூறியிருந்தார். அவர் ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்காவின் வளர்ப்பு தம்பி ஆவார். இவர்கள் இருவரின் திருமணம் கடந்த ஏப்ரல் மாதம் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

-விளம்பரம்-

இந்திரஜா வளைகாப்பு:

மேலும், இவர்கள் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியிருந்தார்கள். இவர்கள் திருமண புகைப்படங்கள் கூட சோசியல் மீடியாவில் வைரல் ஆகி இருந்தது. அதைத்தொடர்ந்து இந்திரஜாவும் கார்த்திக்கும் விஜய் டிவியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை மக்களுக்கு பகிர்ந்து இருந்தார்கள். சமீபத்தில் இந்திரஜாவிற்கு கோலாகலமாக வளைகாப்பு விழா நடைபெற்றுள்ளது. அதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர்கள் கலந்து கொண்டு இந்திரஜாவிற்கு நலங்கு வைத்து ஆசீர்வாதம் செய்தனர்.

மாமியார் எமோஷனல்:

இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் பேசிய இந்திரஜாவின் மாமியார், எங்கள் வீட்டுக்கு 28 வருடங்களுக்குப் பிறகு வாரிசு வருகிறது. அந்த வாரிசை வரவேற்பதற்காக நான் தயாராக இருக்கிறேன். என் வீட்டுக் குலவிளக்கு, என் வம்சத்தை வளர்க்க வந்த தேவதை, இந்திரஜா வீட்டிற்கு ஒரே குழந்தை, கார்த்திக்கும் ஒரே குழந்தை என்பதால் வீட்டிற்கு வாரிசு வர வேண்டும் என்று பல நாள் ஆசைப்பட்டு இருக்கிறேன். அந்த ஆசையை என் பாப்பா நிறைவேற்றி வைத்து விட்டாள். அந்த சந்தோஷத்தை என்னால் வார்த்தையால் சொல்லவே முடியாது. அந்த அளவிற்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறிவிட்டு இந்திரஜாவிற்கு முத்த மழையை பொழிந்து இருக்கிறார்.

Advertisement