தனது கணவர் பற்றி தப்பாக பேசிய இயக்குனரை மன்னிப்பு கேட்க வைத்த நடிகை மேக்னா.

0
7197
- Advertisement -

சமீபத்தில் கன்னட திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த சிரஞ்சீவி சார்ஜுன் உயிரிழந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்த மேக்னா ராஜ்ஜின் கணவரும், நடிகர் அர்ஜுனின் மருமகனும் தான் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா. ஜூன் 6 ஆம் தேதி சிரஞ்சீவி சர்ஜா தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. பின் உடனடியாக இவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை.

-விளம்பரம்-

சிரஞ்ஜீவியின் இறப்பில் இருந்து இன்னும் அவர்களது குடும்பத்தினர் மீளாமல் தான் இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் போதை பொருள் விவகாரத்தில் சிரஞ்சீவி சார்ஜா பெயரை இழுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ். கடந்த மாதம் 21 ஆம் தேதி தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்றதாக டிவி நடிகை அனிகா உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டது கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில் இந்த போதை பொருள் விவகாரத்தால் பல்வேறு கன்னட நடிகர்கள் நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து நிமிர்ந்து நில் பட நடிகை ராகினி கூட கைது செய்யப்பட்டிருந்தார்.

- Advertisement -

மேலும் கன்னட சினிமாவில் நடக்கும் பார்ட்டிகளுக்கு போதை பொருளை சப்ளை செய்யப்படுவதாக இயக்குனர் இந்திரஜித் லங்கேஜ் குற்றம் சாட்டியிருந்தார் மேலும் பல்வேறு நடிகர்கள் நடிகைகள் மீதும் அவர் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற இந்திரஜித் மறைந்த நடிகர் சிரஞ்சீவி மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவரது உடலை ஏன் பிரேத பரிசோதனை செய்யவில்லை என்றும் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிரஞ்சீவியின் மனைவி மேகனா இயக்குனர் இந்திரஜித் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்

இந்த நிலையில் இயக்குனர் இந்திரஜித் இந்த விவாகரத்தில் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிரஞ்சீவி சர்ஜாவுக்கு எதிரான எனது அறிக்கைகளை நான் ஏற்கனவே வாபஸ் பெற்றுள்ளேன். சிரஞ்சீவி போதைப்பொருள் மோசடியில் ஈடுபட்டதாக நான் சொல்லவில்லை. இறப்புக்கான காரணத்தை அறிய சிரஞ்சீவி வழக்கில் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று நான் சொன்னேன், ஏனெனில் சிரஞ்சீவியின் தந்தை தனது மகனின் மரணத்திற்கான உண்மையான காரணம் பற்றி அறிந்திருக்கவில்லை. மேகனா ராஜ் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் யாரையும் நான் காயப்படுத்தியிருந்தால், எந்தவொரு பொது மேடையிலும் மன்னிப்பு கேட்க நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement