‘என் காரில் மட்டும் இத்தனை பிரசவம் நடந்து இருக்கு’ நடிப்பை தாண்டி சிறு வயது முதலே ‘இன்று நேற்று நாளை’ சைன்டிஸ்ட் செய்யும் சேவைகள்

0
502
Karthi
- Advertisement -

தமிழில் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்பவர் நடிகர் TM கார்த்தி. இவர் வேற யாரும் இல்லைங்க, இன்று நேற்று நாளை படத்தில் சைன்டிஸ்ட்டா வருவாரே அவர் தான் நடிகர் கார்த்தி. இவர் பல வருடங்களாக சினிமா துறையில் இருந்து வருகிறார். இவர் பிரபல நடிகரும் ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் குமார் குழுவை சேர்ந்தவர் தான். அதுமட்டும் இல்லாமல் இவர் நாடக கலைஞர் ஆவார். தமிழில் இவர் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘சர்வம்’ படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் பல்வேறு படங்களில் காமெடியனாக நடித்து உள்ளார். இவர் நடித்த படங்களில் எல்லாம் இவரது நடிப்பு நிச்சயம் கவனிக்கப்படும். குறிப்பாக நண்பன், மதராசபட்டினம், ராஜா ராணி, இன்று நேற்று நாளை போன்ற பல படங்களில் இவரது நடிப்பு மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

-விளம்பரம்-

இறுதியாக இவர் விஜய் நடித்த பிகில் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதை தொடர்ந்து கமலி from நடுக்காவேரி என்ற படத்தில் நடித்து இருந்தார். மேலும், சமீபத்தில் இவர் வரலாற்று வீர மங்கைகளான ஜான்சி ராணி, வேலு நாச்சியார், ராணி சென்னம்மா போன்றவர்களை போலவே வேடமிட்டு போட்டோ ஷூட் நடத்தி இருந்தார். அந்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் கார்த்தி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

நடிகர் TM கார்த்தி அளித்த பேட்டி:

அதில் அவர் கூறியிருப்பது, நான் பள்ளிப் பருவத்தில் ரொம்ப அமைதியான பையன். யாருடனும் அவ்வளவாக பேசவே மாட்டேன். சாப்பிடும் நேரத்தில் கூட வெளியே போனால் பலரிடம் பழக வேண்டுமென்பதற்காக வகுப்பறையிலேயே சாப்பிடுவேன். அந்த அளவிற்கு அமைதியான பையன். எந்த ஒரு போட்டிகளிலும் கலந்து கொள்ள மாட்டேன். ஆனால், வீட்டில் எல்லோருடனும் ஜாலியாக இருப்பேன். அப்போது எம்ஜிஆர், சிவாஜி சார் போல் நடித்து காட்டுவேன். அப்போது நான் சிறுபையன் என்பதால் எதை செய்தாலும் பாராட்டுவார்கள். அதே என்னை மேடை நாடகங்களில் நடிக்க வைக்கத் தூண்டியது. அதற்கு பிறகு கல்லூரி பருவத்தில் நான் அப்படியே மொத்தமாக மாறிவிட்டேன்.

karthi

நாடக மேடை குறித்து கார்த்தி சொன்னது:

படிப்பதைத் தவிர நாடகங்களில் நடிப்பது, போட்டி, விளையாட்டு என்று வெளியில் தான் சுற்றிக் கொண்டிருப்பேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நாடக கலைஞன் ஆனேன். நான் பல நாடகங்களில் நடித்திருக்கிறேன். அதற்காக எனக்கு விருதுகள் நிறைய கிடைத்து இருக்கிறது. நாடகத்துறையின் மூலம் தான் எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நாடகத்தில் நான் நடித்ததை பார்த்து தான் நண்பன் படத்தில் ஷங்கர் சார் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். என்னதான் படங்களில் நடித்திருந்தாலும் எனக்கு நாடகத்தில் நடிப்பது தான் ரொம்ப பிடிக்கும். இது ஒரு பக்கமிருக்க, நான் சமூக சேவையும் ஒரு பக்கம் செய்துகொண்டுதான் இருக்கிறேன்.

-விளம்பரம்-

கொரோனா காலத்தில் செய்த உதவிகள்:

என் பள்ளி பருவத்தில் தான் இந்த சமூக சேவை தொடங்கியது. நான் மட்டுமல்ல எல்லோருமே சமூக சேவைகள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். பள்ளிப் பருவத்தில் முதியோர் இல்லத்திற்கு டிக்கெட் விற்று அதில் வரும் பணத்தை கொடுப்போம். அதற்கு சுனாமி வந்தபோது தீவிரமாக இறங்கி செய்ய ஆரம்பித்தேன். கேரளா வெல்லம், தமிழ்நாடு வெள்ளம் போன்ற பல நிகழ்வுகளில் என்னால் முடிந்ததை செய்து இருக்கிறேன். மூன்று வருடமாக கொரோனா காலகட்டத்தில் என்னால் முடிந்த வரை உதவி செய்திருக்கிறேன். படிக்க முடியாத குழந்தைகளுக்கு புத்தகம் வாங்கி தருவது, வியாபாரம் செய்ய வண்டி வாங்கி தருவது, சாப்பாடு, துணி போன்ற எங்களால் முடிந்த சிறு உதவிகளை செய்து வருகிறோம்.

பிரசவத்திற்கு கார் கொடுத்த கார்த்தி:

இதில் நான் மட்டும் இல்லை என் டீமில் இருக்கிற ஒரு 250 பேருக்கு மேல் இருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து தான் செய்கிறோம். அப்படியே கொரோனா காலகட்டத்தில் பெண்கள் பிரசவத்திற்கு ரொம்ப கஷ்டப்பட்டார்கள். அப்போது நான் என்னுடைய காரை பிரசவத்திற்காக கொடுத்து இருந்தேன். என்னுடைய காரில் 15 பிரசவம் நிகழ்ந்திருக்கிறது.குழந்தை பிறந்த பிறகு வந்து என்னிடம் நன்றி சொல்லும் போது ரொம்ப சந்தோசமாக இருந்தது. இப்படி என்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இப்படி கார்த்தி அளித்திருந்த பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement