தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் பட்டைய கிளப்புகிறார். இவர் தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
https://twitter.com/Mysteri13472103/status/1299608565926125568
சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகை நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடந்து படங்களில் நடித்து வருகிறார் . சமீபத்தில் இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஓ பேபி திரைப்படமும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்திற்கு பிறகு தற்போது இவர் மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதே போல இந்த லாக் டவுன் சமயத்தில் தனது வீட்டிலேயே சொந்தமாக காய் கறிகளை விளைவித்து வருகிறார் சம்மு. மேலும், எப்போதாவது லைவ் சாட்டில் தோன்றி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தும் வருகிறார் நடிகை சமந்தா.
https://twitter.com/Mysteri13472103/status/1300347488675586048
அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் சாட்டில் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர், தொப்புளில் வளையம் குத்துவது பற்றி கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த சமந்தா, அப்படி செய்வது தவறான முடிவு. அதை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன். நீங்கள் அதை பற்றி யோசித்தால். அதனை விட்டுவிடுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார்.





