விஜய் சேதுபதி இடுப்பை கிள்ளிட்டேன் ! அவரை சைட் அடிச்சிருக்கேன் ! பிரபல நடிகை ஓபன் டாக்

0
9043
Actress Gayatri

நீங்க நடிச்ச படங்கள்ல பெரும்பாலும் விஜய் சேதுபதிதான் ஹீரோ. எதுவும் ஸ்பெஷல் காரணம் இருக்கா?”
இந்தக் கேள்வியை நீங்க விஜய் சேதுபதியைப் பேட்டி எடுக்கும்போதும் கேட்கணும். `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துல எனக்கும் அவருக்குமான போர்ஷன் ரொம்ப கம்மி. ஆனாலும், அவர்கூட நான் நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணியிருக்கேன்.
gaythri

நாங்க எல்லோரும் ஒரு ஆபீஸ்லதான் ரிகர்சல் பார்த்தோம். க்ளைமாக்ஸ்ல வர்ற சீனை முழு டீமோட எங்களைச் சும்மா நடிக்க வெச்சுப் பார்த்தாங்க. அதை ரெக்கார்ட் பண்ணி `இதே மீட்டர்லதான் நீங்க பண்ணனும்’னு சொன்னாங்க. அந்த டைம்லதான் சேது நல்லா பழக்கம் ஆனார். ஆனா, அப்போ பழகுனதைவிட இப்போ ரொம்பக் கம்மியாதான் பழகுறோம். ஏன்னா, இப்போ அவர் ரொம்பவே பிஸி ஆகிட்டார்.”

இந்த வருடம் நிறைய படங்கள்ல கமிட் ஆகியிருக்கேன். `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ ரிலீஸ் ஆகியிருச்சு. நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. `சூப்பர் டீலக்ஸ்’ படத்தோட ஷூட்டிங் முடியப்போகுது. இன்னும் ரெண்டு சீன் முடிக்க வேண்டியது இருக்கு. ரொம்பநாள் ஆகாதுனு நினைக்கிறேன். இந்தப் படத்துல பெரிய பட்டாளமே இருக்கு.

நான், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் முக்கியமான ஆள், ஷில்பாவா விஜய் சேதுபதி. ஷில்பாவை நானே நிறைய தடவை சைட் அடிச்சிருக்கேன். விஜய் சேதுபதியை நான் நிறைய கெட்அப்ல பார்த்திருக்கேன். லேடி கெட்அப் அவருக்குப் புதுசு. ஐ-லைனர், லிப் க்ளாஸ், லிப்ஸ்டிக் எல்லாம் போட்டு வந்ததைப் பார்த்துட்டு `ச்சே எவ்ளோ அழகா இருக்கார்ல’னு நானே பொறாமைப்பட்டிருக்கேன்.

Vijay-Sethupathi-s-Shilpa

ஒரு சிலர் மட்டும்தான் ஆம்பளயாவும் அழகா இருப்பாங்க, பொம்பளயாவும் அழகா இருப்பாங்க. அந்த மாதிரி லக்கியான முகம் விஜய் சேதுபதிக்கும் இருக்கு. அவரை அந்த கெட்அப்ல பார்த்தவுடனேயே இடுப்பைக் கிள்ளிட்டேன். ஷூட்டிங் போற ஒவ்வொரு நாளும் `ஷில்பா எங்கே ஷில்பா எங்கே’னு விஜய் சேதுபதியைத்தான் தேடுவேன். அப்புறம் `சீதாக்காதி’ பட வாய்ப்பும் எனக்கு வந்தது. இந்தப் படத்துல ஒரு ஹீரோயின்னு சொல்ல முடியாது. நானும் ஒரு நடிகையா வர்றேன். ஸோ, இந்த வருடம் நல்லதே நடக்கும்.”