இப்படியெல்லாம் நான் இப்போதான் முதன் முறையா பாக்கற. நடுவரை கடுமையாக விமர்சித்து பின்னர் அதை நீக்கிய தோனியின் மனைவி.

0
1529
- Advertisement -

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் நடுவரின் முன்னுக்பின்னான முடிவை பற்றி தோனியின் மனைவி சாக்ஷி கடுமையாக விமர்சித்து இருக்கிறார். ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தோனி வழக்கம் போலவே முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தார்.

-விளம்பரம்-

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 216 ரன்கள் குவித்தது.. அதற்கடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் டாம் குரன் பேட்டிங் செய்து கொண்டு இருக்கும் போது தீபக் சஹர் வீசிய பந்தை அடிக்க முயன்ற போது அது ஸ்டம்புக்கு பின்னால் இருக்கும் தோனியிடம் கேட்ச் சென்றது. அதற்கு நடுவர் அவுட் கொடுத்துவிட்டார். ஆனால், டாம் குரன் ரிவிவ் கேட்ட முயன்ற போது டீம் ரிவிவும் அந்த சமயத்தில் முடிந்து இருந்தது. பின்னர் நடுவருடம் பேச்சு வார்த்தை நடைபெற்று இருக்கும் போது ரீப்லேவை பார்க்கையில் அந்த பந்து டாம் குறினின் பேட்டிலும் படவில்லை, தோனி கேட்ச் பிடிக்கும் போது அது தரையில் பட்டிருந்தது.

பின்னர் நடுவர் தனது தீர்ப்பை மாற்றி நாட் அவுட் கொடுத்தார். நடுவரின் இந்த முன்னுக்குப்பின்னான தீர்ப்பை விமரித்துள்ள தோனியின் மனைவி சாக்ஷி, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில் ‘ஒருவர் அவுட் என்று நடுவர் அறிவிக்கப்பட்டு பின்னர் மூன்றாம் நடுவர் அதனை பரிசீலத்ததை இப்போது தான் நான் முதன் முறை பார்க்கிறேன். நடுவர்கள் கொஞ்சம் முன்னேற வேண்டும். இது ஒரு சிறப்பு வாய்ந்த தொடர் பல கோடி பேர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.’ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

பின்னர் இந்த ஸ்டோரியை நீக்கிசாக்ஷி நீக்கிவிட்டாலும். அதன் ஸ்க்ரீன் ஷாட் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடுவரின் இந்த தீர்ப்பை ராஜஸ்தான் அணி கூட ட்விட்டரில் விமர்சித்து உள்ளது. ஏற்கனவே இந்த ஐபிஎல் தொடரில் நடுவர்களின் முடிவுகள் சரியாக இல்லை என்று விமர்சனங்கள் எழத்துவங்கியுள்ள நிலையில் இப்போது இந்த சர்ச்சையும் அந்த லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது.

Advertisement