Csk ஜெர்சியை போட்டுகொண்டு விசில் அடித்து துள்ளி குதிக்கும் விஜய் – அரிய வீடியோ.

0
1651
Vijay
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு ஆண்டின் ஐபிஎல் 13வது சீஸனின் முதல் போட்டி நேற்று(செப்டம்பர் 19) சனிக்கிழமை கோலாகலமாக துவங்கியது. இந்த சீஸனின் முதல் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே நடந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று தொடரை சிறப்பாக ஆரம்பித்துள்ளது.

-விளம்பரம்-

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சவுரப் திவாரி 42 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

டுபிளசிஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். இறுதியில் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை குவித்து வெற்றிபெற்றது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் சிஎஸ்கே ரசிகர்களை சற்றும் ஏமாற்றவில்லை.

சி எஸ் கே அணியின் வெற்றியை சென்னை ரசிகர்கள் நேற்று கொண்டாடினர். இப்படி நிலையில் ஐபிஎல் போட்டியின் போது நடிகர் விஜய் Csk ஜெர்சியை அணிந்து கொண்டு விசில் அடித்துக்கொண்டு துள்ளிக்குதித்து சென்னை அணியை உற்சாகப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது எந்த சீசன்னு சரியா சொல்லுங்க பாப்போம்.

-விளம்பரம்-
Advertisement