கொரோனா பரிசோதனை மேற்கொண்ட தொகுப்பாளினி பாவனா – காரணம் இது தான்.

0
865
bhavana
- Advertisement -

மீடியா துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து மீடியா துறையில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் பாவனா பாலகிருஷ்ணனுக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு.

-விளம்பரம்-
https://www.instagram.com/stories/bhavnabalakrishnan/2388420513963141905/?igshid=o87v280nx3gr

‘விஜய் டிவி’-யில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் பாவனா பாலகிருஷ்ணன். தற்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. இந்நிலையில், பாவனா பாலகிருஷ்ணன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

- Advertisement -

சமீப காலமாக எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த பாவனா சமீப காலமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். அதன் பிறகு அம்மணிக்கு தொகுப்பாளினி வாய்ப்பு படு ஜோராக சூடுபிடிக்க துவங்கியது. நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் கூட தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றிருந்தார்.

இந்த நிலையில் தொகுப்பாளினி பாவனாவிற்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் பாவனா இன்னும் சில தினங்களில் அரபு நாட்டில் நடக்க உள்ள ஐபிஎல் தொடரில் தொகுப்பாளியாக கலந்து கொள்ள செல்ல இருக்கிறார். அதன் முன்னெச்சிரிக்கையாக தான் பாவனா, கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இன்னும் இதற்கான ரிசல்ட் வரவில்லையாம்.

-விளம்பரம்-
Advertisement