தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் எம்.சசிக்குமார். 2008-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘சுப்ரமணியபுரம்’. இது தான் சசிக்குமார் இயக்கி நடித்த முதல் திரைப்படமாம். அதன் பிறகு ‘ஈசன்’ என்ற படத்தினை இயக்கினார். ‘ஈசன்’ படத்துக்கு பிறகு நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தார் சசிக்குமார், படம் எதுவும் இயக்கவில்லை.

‘நாடோடிகள், போராளி, சுந்தர பாண்டியன், குட்டிப் புலி, பிரம்மன், தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளையத் தேவா, கொடி வீரன், அசுரவதம், பேட்ட, கென்னடி கிளப், எனை நோக்கி பாயும் தோட்டா, நாடோடிகள் 2’ என அடுத்தடுத்து சில இயக்குநர்களின் படங்களில் நடித்தார் சசிக்குமார். இதில் ‘பேட்ட’ திரைப்படம் சசிக்குமாருக்கு ரொம்பவும் ஸ்பெஷல்.

Advertisement

ஏனென்றால், அதில் ஹீரோவாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்திருந்தார். நடிகர், இயக்குநர் மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளராக தான் நடித்த பல படங்களை தயாரித்ததோடு, மற்ற நடிகர்கள் நடித்த சில படங்களையும் தயாரித்திருக்கிறார் சசிக்குமார். தற்போது, உலகமெங்கும் ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் சசிக்குமார் மதுரையில் போக்குவரத்து காவலர்களுடன் சேர்ந்து போக்குவரத்தை சீர்ப்படுத்தி ஒரு நாள் வாலண்டியராக பணியாற்றியிருக்கிறார். இது தொடர்பாக சசிக்குமார் பேசுகையில் “நமக்கு வீட்ல இருக்க கஷ்டமா இருக்கு. ஆனா, நமக்காக இவங்க வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க. நாம தான் ஒத்துழைக்கணும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement

சசிக்குமார் வாலண்டியராக பணியாற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. தற்போது, தமிழில் ‘ராஜவம்சம், பரமகுரு, எம்ஜிஆர் மகன், நாநா, கொம்பு வச்ச சிங்கம்டா’ என அடுத்தடுத்து ஐந்து படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் சசிக்குமார். ‘கொரோனா’ பிரச்சனை முடிந்த பிறகு இப்படங்களின் ரிலீஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement