தமிழ் சினிமாவில் கடந்த சில காலமாகவே அடல்ட் காமெடி படங்கள் பட்டையை கிளப்பி வருகிறது. அந்த வகையில் தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஹர ஹர மஹாதேவிக்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார். அதன் பின்னர் கடந்த ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ‘ படத்தின் மூலமும்ம் ஒட்டுமொத்த இளசுகளையும் கவர்ந்தார். இந்த திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தொடர்ந்து ஆர்யா மற்றும் ஷாயிஷாவை வைத்து ‘கஜினிகாந்த்’ படத்தை இயக்கி இருந்தார். ஆனால், அந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியது. இருப்பினும் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தெலுங்கில் ரீ மேக் செய்து அதிலும் வெற்றிகண்டார் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இந்த நிலையில் இருட்டு அறையில் முருட்டு குத்து திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்.
ஆனால், இந்த படத்தில் கௌதம் கார்த்திக் நடிக்க மறுப்பு தெரிவித்ததால் தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பக்கத்தில் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயகுமாரே ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘இரண்டாம் குத்து’ என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
மேலும், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் முதல் பாகத்தில் நடித்த சாம்ஸ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். மேலும்,முதல் பாகத்தில் நடித்த யாஷிகா இந்த படத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்டதால் அவருக்கு பதிலாக இந்த படத்தில் இளம் நடிகை ஷாலு ஷம்மு நடித்து வருகிறாராம்.