தற்போது தனது அடுத்த படைப்பிற்கு தயாராகி வருகிறார் இந்த இரட்டை மொழி பட இயக்குனர். இவரது அடுத்த படத்திற்கு "ஸ்டார்ட் கேமிரா ஆக்சன்" என்று பெயர் வைத்துள்ளனர். மேலும், இந்த படத்தை ஸ்டூடியோ கிறீன் ஞானவேல் தயாரிக்கவிருக்கிறார்.
இந்த படத்தில் நடிக்கும் கலைஞர்கள் பற்றிய விவரம் இன்னும்வெளியாகவில்லை. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஏற்கனவே சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கிய படங்கள் இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதே போல இந்த படமும் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதே போல " ஸ்டார்ட் கேமிரா ஆக்சன்" என்ற தலைப்பை வைத்து பார்க்கும் போது இந்த படமும் ஒரு கமெர்ஷியல் படமாக தான் இருக்கும் என்று உணர்த்துகிறது.




