கொரோனா வந்ததால் மருத்துவமனையில் தற்கொலை- விபரீத முடிவெடுத்த இருட்டு கடை அல்வா உரிமையாளர்.

0
1531
iruttu
- Advertisement -

நாடு முழுவதும் கொரோனாவின் ஆட்டம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. இன்னும் இந்த கொரோனா வைரசுக்கு மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை. இதனால் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரி சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயில் எதிரே 1900 ஆம் ஆண்டு கிருஷ்ணசிங் என்பவர் லாலா கடை ஒன்றை தொடங்கினார். தினமும் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை தான் இந்த கடை இருக்கும். அந்த கடையின் முன்பு ஒரு சின்ன 40 வாட்ஸ் பல்பு மட்டும் எரிந்து கொண்டிருக்கும். இதனால் தான் அக்கடைக்கு இருட்டுக்கடை அல்வா என்று பெயர் வந்தது. இந்த கடையில் இருந்து தயாரிக்கப்படும் அல்வா தான் திருநெல்வேலிக்கே பெயர் பெற்று தந்தது.

- Advertisement -

மேலும், இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இக்கடையில் தயார் செய்யப்படும் அல்வா கொண்டு செல்லப்படுகிறது. அந்த அளவிற்கு இந்த இருட்டுக் கடை அல்வா புகழ்பெற்றது. இந்நிலையில் உலக புகழ் பெற்ற இந்த இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரி சிங்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இவர் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பின்பு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை மருத்துவமனையில் ஹரி சிங் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நெல்லை மாவட்டம் முழுவதும் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும்,ஏற்கனவே பல பிரபலங்கள் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement