பிகில் திரைப்படம் flopஆ ? – லவ் டுடே விழாவில் தயாரிப்பாளர் அர்ச்சனா பேசி வீடியோ ஆதாரமாக பகிரும் நெட்டிசன்கள்.

0
628
- Advertisement -

மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் படத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது இதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக இந்த திரைப்படம் முன்னுரை நான் ஒரு கோடிக்கு மேல் வசீலித்ததாக கூறப்பட்டது இப்படி ஒரு நிலையில் வெயில் திரைப்படத்தால் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் அர்ச்சனாவிற்கு நஷ்டம் ஏற்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும், இந்த படத்திற்கு போட்டியாக வெளியான கார்த்தியின் கைதி திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி கண்டது இதனால் பிகில் படத்திற்கு வரும் கூட்டம் நாளுக்கு நாள் குறைந்ததாக தியேட்டர் நிர்வாகிகள் அறிவித்திருந்தார்கள்.

- Advertisement -

இருப்பினும் இந்த படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி அடைந்து உள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்திருந்தனர். வெளியான பத்து நாட்களிலேயே 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து இந்த படம் சாதனை படைத்தது. இப்படி ஒரு நிலையில் 180 கோடி செலவில் உருவான இந்த படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தால் ags நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதாக அர்ச்சனாவே சூசகமாக தெரிவித்து இருப்பதாக நெட்டிசன்கள் வீடியோ ஒன்றை பகிர்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனா லவ் டுடே படத்தின் 100வது விழாவில் கலந்து கொண்டு இருந்தார். அப்போது பேசிய அவர் இறுதியாக பிகில் இசை விட்டு விழாவில் இதேபோன்று நின்று நான் பேசியபோது அது ஒரு உற்சாகமாக இருந்தது. ஆனால் லவ் டுடே ஏன் ஸ்பெஷல் என்றால் உங்களுக்கு ஒரு உயரம் வாழ்க்கையில் கிடைக்கும் போது அதன் பின்னர் உங்களுக்கு அதிக ஏற்படும் அதிக தோல்விகளால் நீங்கள் துவண்டு போவீர்கள். அப்போது அதிலிருந்து மீண்டும் ஒரு உயரம் கிடைக்கும் அல்லவா அதுதான் லவ் டுடே.

-விளம்பரம்-

கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் நான் வேலையில்லாமல் மிகவும் துவண்டு போயிருந்தேன் அப்போதுதான் ராஜசேகர் திரைப்படத்தை தயாரித்தேன் 2022 ஆம் ஆண்டு ஒரு நல்ல உயரத்துடன் துவங்கினோம். முதலில் நாய் சேகர் பொங்கல் வண்டியில் வெளியாகி நன்றாக சென்றது இதனை தொடர்ந்து லவ் டுடே திரைப்படமும் நல்ல வெற்றியை கொடுத்திருக்கிறது என்று பேசி இருக்கிறார்.

அர்ச்சனா பேசி இருக்கும் இந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டு இருப்பது பிகில் படத்தை தான் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமே ‘லவ் டுடே’ படத்திற்கு முன் ags தயாரிப்பில் நாய் சேகர் மற்றும் பிகில் ஆகிய இரண்டு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த வீடியோ அவர் நாய் சேகர் படம் வெற்றி படம் என்பது போல பேசி இருக்கிறார்.

இதனால் இவர் குறிப்பிட்டு இருப்பது பிகில் படத்தை தான் என்றும், பிகில் படம் ags நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்த படம் என்றும் நெட்டிசன்கள் பலர் கூறி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க கடந்த 2020 ஆம் ஆண்டு republic என்ற ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தால் தயாரிப்பார்களுக்கு 20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக செய்தி வெளியிட்டது. ஆனால்,, அப்போது அந்த தகவலை மறுத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement